Pictures of Gourmet Food

Thursday, May 21, 2015

தெலுங்கர்களுக்கு பிடிக்காத வார்த்தை தமிழன்

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் தமிழர்கள் உயிரிழந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் வேளையில் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான உறவினை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.தொப்புள் கொடி உறவு என்ற ஈழத் தமிழர்களைக் குறிப்பிடும் நாம் , பக்கத்துக்கு மாநிலங்களில் வாழும் மலையாளி, கன்னடர் மற்றும் தெலுங்கர்களை அவ்வாறு கருதாதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.

மொழி தான் நம்மைப் பிரித்து வைத்திருக்கின்றதா என்று பலர் கூறினாலும் அதில் ஓரளவுக்கு உண்மை உண்டே என்று தோன்றுகின்றது. ஏனெனில் இது போன்ற ஒரு பிரச்சனைக்கு வித்திட்டவர் மொழியியல் அறிஞர் கால்டுவெல், தமிழின் எச்சங்களே மற்ற திராவிட மொழிகள் என்ற அவரின் கோட்பாடு மற்ற மாநிலத்தவருக்கு தமிழர்களின் மேல் ஒரு வித காழ்புணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கி விட்டது.

இதன் தொடர்ச்ச்சியாக கருணாநிதி திராவிட நாடு என்ற ஒரு புது கொள்கையினை உருவாக்கி பீதியைக் கிளப்ப ,பயந்து போன அண்டை மாநிலத்தவர்கள் , இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டால் தாங்கள் தமிழர்களின் எச்சம் எனபது உறுதியாகிவிடும் ,வட இந்தியர்களுடன் இணக்கமான ஒரு சூழலிணை உண்டாக்கிக் கொண்டனர்.

இறுதியாக தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பின் போது மற்ற திராவிட மாநிலங்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள மத்திய அரசின் மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டனர்.இதன் விளைவாக தமிழன் இந்தியாவில் தனித்து விடப்பட்டான்.இப்பொழுது தலைப்புக்கு வருவோம் , தெலுங்கர்களுக்கு மட்டும் தான் தமிழர்களைப் பிடிக்காதா என்ற எண்ணம் ஏற்படலாம் , மற்றவர்களுக்கு ஏற்படின் அது அவ்வளவு முக்கயத்துவம் வாய்ந்தது அல்ல. தமிழகத்தின்  தலை நகரம் தொடங்கி இண்டு  இடுக்கு வரை வாழும் இவர்களுக்கு நம்மைப் பிடிக்க வில்லை என்றால் அது ஏன் என்று அறிந்து கொள்ள்ளவேண்டிய அவசியம் இருக்கின்றது.

வரலாறு :
முதலில் வரலாற்று  ரீதியாக பார்ப்போம். தமிழர்கள் சொல்வது தெலுங்கர்கள் இங்கிருந்து தனியாகப் பிரிந்து சென்று ஒரு புது இனக்குழுவாக மாறி , தமிழும் சமஸ்கிருதமும் கலந்த ஒரு மொழியினை உருவாக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் தெலுங்கர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா , லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்கள் , கடல் கோள்  (Tsunmai ) ஏற்பட்ட பின்னர் தமிழர்கள் தாங்கள்(தெலுங்கர்கள்)  வாழ்ந்த பகுதினை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்று கூறுகின்றனர்.அதாவது நாம் தற்பொழுது வாழும் தமிழகம் என்ற நிலபரப்பு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் அவர்கள் ஒரு புதிய வரலாற்றினை சொல்கின்றனர்.அதனை நிரூபிக்க தமிழகத்தின்  அனைத்து மாவட்டங்களில் வாழ்ந்து வரும் தெலுங்கர்களை உதாரணமாகக்  காட்டுகின்றனர்.

மேற்சொன்ன இரண்டில் எது உண்மை என்பதனை நிருபிக்க வேண்டியது வரலாற்று ஆய்வாளர்களின் கடமை. இருப்பினும் இலக்கிய அடிப்படையில் பார்த்தால் தமிழுக்கு முன்பாகவே எந்த ஒரு இலக்கியமும் அங்கு எழுதப்படவே இல்லை. இதனை தான் தமிழர்கள், தெலுங்கு  தமிழில் இருந்து பிரிந்த ஒன்று  , தமிழர்களே மூத்த  குடி என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

தற்பொழுதைய காலத்திற்கு வருவோம் , வாழ்க்கை முறையில் இருந்து வழிபாட்டு முறை வரை அனைத்திலும் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டாகி விட்டது. உருவ அமைப்பிலும் உணவு பழக்க வழக்கங்களில் மட்டும் தான் நம்மிடையே ஒற்றுமை எஞ்சி இருக்கின்றனது.


சமூக நிலை :
பெரியாரால் இங்கு சமூக விடுதலையும் சாதி ஒழிப்பும் ,மூட நம்பிக்கை ஒழிப்பும் சாத்தியமாயிற்று. அங்கே இந்த நிலைமை தலை கீழாக இருக்கின்றது. ராமர் வழிபாடு மிகப்பரவலாக உள்ளது. சாதிய ரீதியாக மாணவர்கள் தனி தனியாகப் பிரிந்து கிடப்பது என்பது மிக சர்வ சாதரணமான ஒன்று. ரெட்டி மற்றும் நாயுடு தவிர்த்தவர்கள் எந்த ஒரு துறையிலும் முன்னேறுவதற்கு பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றது.

திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி  பரப்பிக் கொண்டிருகிருந்தனர் . அந்தளவுக்கு காலத்தால் பின்னோக்கி வாழ்கின்றனர்.திராவிடர் கழகத்தால் நடைபெற்ற தாலி அகற்றும் நிக்ழச்சியைப் பார்த்து தமிழன் just like that என கடந்து விட்ட சூழலில் ஆந்திராவில் அந்த நிகழச்சி மிகப் பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது. திரும்ப திரும்ப ஒளி  பரப்பிக் கொண்டிருகிருந்தனர்.என்னுடைய தெலுங்கு நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சி குறித்து குறிப்பிட்டு சண்டைக்கே வந்து விட்டான். கீழே உள்ள உங்கள் குழாய் (Youtube ) இணைப்பில் ஆந்திர தொலைக்கட்சியில் விரிவாக ஒளிபரப்பட்ட அந்தக் காணொளியை பாருங்கள்.

கல்வி:
இப்படி மூட நம்பிக்கையினை பின்பற்றி வாழ்ந்தாலும் கல்வியில் தமிழகம் தொட முடியாத உயரத்திற்கு சென்று விட்டனர். IIT யில் அதிக எண்ணிக்கையில் பயில்வர்களில் முதலிடம் ஆந்திர மாணவர்கள்தான். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் தமிழர்களை ஒப்பிடுகையில் மிக சிறப்பாக இருக்கின்றது. நான் பார்த்தவரையில் படிப்பில் மிக மிக கவனமாகவும் அதிக பொறுப்புணர்ச்சியுடனும் இருப்பார்கள் இதுவே இவர்களின் வெற்றிக்குமுக்கியக் காரணமாக இருக்கின்றது.

இருப்பினும் இதில் கூடவே ஒரு சில சிக்கல்களும் உள்ளது, படைப்பாற்றல் என்ற ஒன்றில் அவர்கள் எந்த வித கவனமும் செலுத்த முடிவதில்லை, எளிதாக வேலை கிடைக்கக் கூடிய படிப்புகளையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.அதனால் தான் இன்று வரை ஒரு சிறந்த விஞ்ஞானி அங்கு உருவாகவே இல்லை. தமிழ் நாட்டில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள் இருப்பது போல் அங்கு இல்லை.

பெருமையாக சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே நபர் தற்பொழுதைய microsft தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா மட்டுமே. இதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். நாம் நம் இலக்கிய பெருமைகளைப்  பேசினால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.எனவே இந்து மதத்தினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அதனை தங்கள் வரலாறு என்று கூறிக் கொள்வதன் மூலம் தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நிறுவ முயல்கின்றனர் .


திரையுலகம்:
இங்கே சினிமா மட்டும் தான் தமிழர் தெலுங்கர்களிடையே ஒரு பெரிய இணைப்புப் பாலமாகத் திகழ்கின்றது. NTR , சிரஞ்சீவி ,தற்போது அவரின் மகன் ராம் சரண் வரை சினிமா ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.முகப் புத்தகத்தில் பதமிழக இளைஞர்கள் பலரும்  தெலுங்கு கதாநாயகர்கள் புகைப்படத்தினை  profile ஆக வைத்திருக்கின்றனர், இதில் பெண்களும் தெலுங்கு கதாநாயகர்களை மிகவும் ரசிக்கின்றனர்.ஆந்திராவில் தமிழ் சினிமா கதாநாயகர்களை விட இசை அமைப்பாளர் இளையராஜா , இயக்குனர்கள் , நடன இயக்குனர்களுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கின்றது.


தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்ற குரல் சமீப காலமாக ஓங்கி ஒலிக்கின்றது. அது போல ஆந்திராவிலும் தெலுங்கர்கள் தங்கள் தமிழர்களின் நீட்சி  அல்ல தாங்கள் ஒரு சுயம்பு என்பதனை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.இணையத்தில் ஒரு சில இடங்கிளில் தமிழர் தெலுங்கர்  விவாதம் நடந்து கொண்டு தான்இருக்கின்றது. அது வீதிக்கு வராதவரை நல்லது. 

நான் உணர்ந்தவரை தமிழர்களின் நீண்ட நெடியப் பாரம்பரியப் பெருமை தெலுங்கர்களுக்கு தாழ்வு மனப்பானமையை உண்டாக்குகின்றது.இதுவே அவர்களுக்கு நம் மேல் வெறுப்பு உண்டாக வித்திடுகின்றது . வேறு ஏதேனும் காரணம் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இந்த நீண்டபாதிவினை பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி .