Pictures of Gourmet Food

Wednesday, February 4, 2015

அஜீத் -பாபிலானா-சிங்கம் புலிஇந்த மூன்று பேருக்கும் பல தொடர்புகள் உண்டு. அஜீத் நடித்த ரெட் படத்தின் மூலமாகத் தான் சிங்கம் புலி ராம் சத்யா என்ற பெயரில் இயக்குநராக அஅறிமுகமானார் .

பாபிலோனா தனக்கு மிகவும் பிடித்த நாயகன் அஜீத் என்றும் அவருடன் நடிப்பது தனது லட்சியம் என்றும் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கின்றார்இவ்வாறு அஜீத்துடன் தொடர்புடைய இவ்விருவரின் வளர்ச்சி பற்றியும் அஜீத் தற்பொழுது அடைந்துள்ள உயரம் குறித்த அலசல் தான் இந்தப் பதிவு.சிங்கம் புலி அவர்கள், கிரேஸி மோகன் போன்றே போன்றே பொறியியல் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர். நாம் திரையில் பார்ப்பது போன்றே மிகவும் வேடிக்கையான மனிதர். அஜீத்தின் சாக்லேட் பாய் இமேஜை உடைத்தெறிந்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ரெட் படப்பிடிப்பில் அஜீத் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மொட்டைத் தலையுடன், உருண்டு திரண்ட உடலுடன் மிரட்டலாக இருந்தார்.  இந்தளவுக்கு பல மெனக்கல்களுடன் இயக்கினாலும் அப்படம் வெற்றி பெறவில்லை .பின்னர் சூர்யாவை வைத்து மாயாவி என்றொரு படம் இயக்கினார், அது அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் படமாக அமைந்திருந்தது. அதற்கடுத்து எந்த ஒரு தயக்கமும் இன்றி பாலாவிடம் மீண்டும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பாலா, கருணாசைப் போலவே இவரையும் நகைச்சுவை நடிகராக நான் கடவுள் படத்தில் அறிமுகம் செய்தார். அங்கு தொடங்கிய பயணம் இன்று வெற்றிகாரமாக சென்று கொண்டிருக்கின்றது.பாபிலோனாவைப் பொருத்தவரை ஒரு நிலையான வளர்ச்சி அவருக்குக் கிடைக்கவே இல்லை. குறைந்த பட்ஜெட் படங்கள் முதல் மெகா பட்ஜெட் படங்கள் வரை நடித்திருந்தாலும் ஒரு சரியான இடம் கிடைக்கவே இல்லை. திரையில் மிக கவர்ச்சியாக நடித்து வந்தாலும் நிஜ உகில் மிக தைரியமான பெண் , மக்கள் முதல்வரை தைரியத்துக்கு புகழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவர் ஒரு  மேடைகளில் ஏற்கனவே தயார் செய்த உரையினை வாசிப்பதுதான் வழக்கம். ஆனால் பாபி லோனா தொலைக்காட்சி பேட்டிகளிலோ மொட்டு மேடையிலோ மிக தேவாகவும் நேர்த்தியாகவும் பேசுவார். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற  பாலியியல் இணையதளங்கள்  தொடர்பான  விவாத நிகழ்ச்சியில் மிக சிறப்பாக தான் கருத்துகளை எடுத்துரைத்தார்.பொது நிகழ்ச்சிகளிலேயே தலை காட்டாமல் வாழ்ந்து வரும் தல அவர்களின் முன்னால்  பொது விவாதங்களில் மிக தைரியமாகப் பங்கேற்று பேசி வரும் பாபிலோனாவே சிறப்பானாவராக தெரிகின்றார்.


முகப் புத்தகத்திலும் ,வார இதழ்களிலும்  அஜீத்தின் வள்ளல் தன்மை குறித்து  புகழ்ந்து தள்ளுகின்றனர். ஆனால்  எனக்கு திரையில் பார்க்கும் அஜீத் மட்டுமே பிடிக்கின்றது. அவரின் பிரியாணி சமைக்கும் திறமைக்காகவே , பத்திரிக்கையாளர்களுக்கு உதவி செய்வதற்காகவோ அவரை தலையில் வைத்துக் கொண்டாட முடியாது.திரை உலகின் ஜாம்பவான்களுக்கு மரியாதை செலுத்தும் விழாக்களில் கூட பங்கேற்பதில்லை ,அவருக்கு வழங்கப் படும் விருதையும் நேரடியாகப் பெற்றுக் கொள்வதில்லை.உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜீத் அவர்கள் தன்னைப் போன்ற  கடின உழைப்பாளிகளுக்கு நேரில் மரியாதை செலுத்துவதுதான் சிறப்பாக இருக்கும். போதும் தலை மறைவு வாழ்க்கை , வெளியே வாருங்கள் தல .