Pictures of Gourmet Food

Saturday, October 24, 2015

பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+ -பாகம் :2

முதல் பாகத்தில் குறிப்பிட்டுள்ளது போல பாலியலின் மிக முக்கியமான கைப்பழக்கம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம் . கைப்பழக்கம் தமிழ்  சமூகத்தின் இளைஞர்களிடையே நிலவும் மோசமான மூடப்பழக்கம்.இந்த மூடப்பழக்கத்தினை தொடர்ந்து நிலைநிறுத்த மட்டுமே ஊடங்கங்களும் , திரைப்படத்துறையும் மற்றும் இந்த பரம்பரை வைத்தியர்களும் பாடுபடுகின்றனரே தவிர யாருமே இந்த பழக்கம் குறித்த அச்சதினைப் போக்க எந்த ஒரு முயற்சியினையும் எடுக்கவே இல்லை.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் நமது முப்பாட்டன், பாட்டன் மற்றும் அப்பா ஆகியோருக்கு இந்தப் பழக்கம் இருந்ததாகவோ அல்லது அது குறித்த பயம் இருந்ததாக தெரியவில்லை. இல்லாமல் இருந்ததற்காக காரணங்கள்  இளவயது திருமணம், மிக கட்டுப்பாடான சமூக அமைப்பு , கூட்டுக் குடும்ப அமைப்பு முறைகள் என்று பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

உலக ரீதியாகப் பார்த்தாலும் இந்த அச்சத்தில் முதலிடத்தில் இருப்பதும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில்தான் அதிகம்.இதற்கான காரணம் எழுத்தாளர் சாரு சொன்ன மாதிரி பாலியல் வறட்சி ஒரு முக்கியக் காரணம் இருந்தாலும் , அது தவிர பாலியல் குறித்த அறியாமையும் ஆகும்.

இந்த அறியாமையைப் போக்கவே இந்தப் பதிவு. ஆனாலும் இந்த அறியாமையைப் போக்க நவீன மருத்துவமான அலோபதி மருத்துவர்கள் எந்த முயற்சியையும் எடுக்கவே இல்லை. ஆங்கிலத்திலேயே இருக்கும் இந்தப் புத்தகங்களை படிக்கும் நம் நாட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளில் இருக்கும் நோய்கள் குறித்தே அதிகம் படித்து அந்தக் கோணத்திலேயே நோயினை அணுகுவார்கள்.வளர்ந்த நாடுகளில் கைப்பழக்கம் அதிக அளவில் இல்லை , எனவே அது குறித்து  அங்கு உள்ள மருத்துவர்களும் அதிக அளவில் அக்கறை கொளவதும் இல்லை, ஆராய்ச்சிகளும் நடைபெறவே இல்லை . ஆனால் இதே நடைமுறையை நம் நாட்டில் உள்ள மருத்துவர்களும் பின்பற்றுவதால் நம் நாட்டில் இளைய சமூகத்திடம் பீடித்துப் போயிருக்கும் கைப்பழக்கம் குறித்த அச்சம் போக்க எந்த முயற்சியினையும் இவர்கள் எந்த முயற்சியினையும் எடுக்காமல் இன்று வரை இருக்கின்றனர்.இருப்பினும் மருத்துவர் நாராயண ரெட்டி தான் இந்த சமூகத்தின் உண்மை நிலையினை உணர்ந்து அதற்கேற்ப இன்று வரை பாலியல் அறியாமையைப் போக்க பாடுபட்டு வருகின்றார்.

இவ்வாறு நவீன மருத்துவர்கள் அலட்சியமாக இருந்ததனால், பரம்பரை மருத்துவர்கள் அந்த இடத்தினை ஆக்கிரமித்து இளைய சமுதாயத்தை சீரழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர். 

இந்தப் பழக்கம் குறித்த அச்சங்களும் அதற்கான விடைகளும் கீழே :

1. இந்தப் பழக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் . சீரான ஒன்று , தீவிரமான ஒன்று . சீரான என்பது எபோழுதாவது வாரம், மாதம் ஒரு முறை என இருப்பது .இரண்டாவது தீவிரமான என்பது அடிக்கடி நிகழ்வது.தினமும் அல்லது வாரத்தில் பல முறை என்று இருப்பது. எனினும் இரண்டாலும் தாம்பத்திய உறவில் எண்டஹ் ஒரு சிக்கலும் வரவே வராது எனவே அச்சமே வேண்டாம். மிக தைரியமாக முதலிரவொ அல்லது முதல் அனுபவத்தில் தைரியமாக இருங்கள். இனி தமிழகத்தில் ஒருவரும் இந்த பயத்தினால் தூக்கில் தொங்கினார்கள் என்று செய்தியே வரவே கூடாது.

2. பலரும் கிண்டல் செய்வது போல கை ரேகைள் இந்தப் பழக்கத்தினால் அழியும் என்பது  மிக மிக முட்டாள் தனம். கைகளில் இருக்கும் ரேகைகள் என்பவை நாம் ஒரு பொருளை வலுவாகப் பிடிப்பதற்கான அமைப்பு .அது ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் இருக்கும். இதனை அறிவியல் ரீதியாக நிருபித்திருக்கின்றனர் . எனவே இப்படி கிண்டல் செய்பவர்களுக்கு இந்த விளக்கம் அளியுங்கள் அல்லது அவர்களின் அறியாமைக் கண்டு பரிதாபம் கொள்ளுங்கள் .

3. உடல் சக்தி வீணாகும், சோம்பல் வரும் எனப்தெல்லாம் ஒரு மன பயம் மட்டுமே இவை திட்டமிட்டு பரம்பரை மருத்துவர்களால் பணம் பறிக்க பயன்படுத்தும் வாசகங்கள் .இவற்றைப் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் மேற்கண்டால் தான் உண்மை என்ன எனபது தெரிய வரும்.

4.குழந்தைப் பிறப்பிற்கும் அதாவது இனப்பெருக்கத்திற்கும் இதற்குமான தொடர்பு இல்லவே இல்லை. எனினும் முன்பே சொன்னது போல தீவிரமானப் பழக்கம் ஒரு  சில வேளைகளில் அணுக்களின் அளவினை குறைக்கலாம் , இருப்பினும் அணுக்கள் குறைவாக இருப்பதற்கு புகைப் பழக்கம் மற்றும் ஏராளமான காரணங்கள் இருப்பதால் இந்தப் பழக்கம் வெகு சிலவாகவே பாதிக்கும்.

5. இனப் பெருக்க உறுப்பின் அளவும் இந்தப் பழக்கத்தினால் எந்தளவும் படிக்கபடாது.

6. மிக முக்கியமாக வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகுங்கள்.

அடுத்த பதிவில் சீக்கிரம் வெளியேறுதல் குறித்து பார்ப்போம் .