Monday, March 5, 2018

பலூன் படத்தில் அஞ்சலியின் புலம்பல்




பலூன் படம் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் வெளிவந்து சுமாரான வெற்றி என்று படக்குழுவினரே அறிவித்து புதுமையை உண்டாக்கினர்.அது மட்டுமன்றி ஜெய் குடித்து விட்டு படப்பிடிப்புக்கு வந்தார் என்று படக்குழுவினர் புகார் பட்டியல் வாசித்தனர் . ஆனால் இந்தப் பதிவின் நோக்கம் , பலூன் படத்தில் அஞ்சலி சொன்ன முக்கிய ஒரு சமூக பிரச்சனை ,அது அதிகம் யாராலும் கவனிக்கப்படல்லை. 

நம் அம்மாக்கள் மகள்களிடம் , என்னை  போல நீயும் காசுக்காக கணவனையே நம்பியிருக்கும் நிலை வரக்கூடாது , படித்து வேலைக்கு சென்று உங்கள் கையில் காசு இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்தனர் . மத்திய தர வர்க்கத்தில் இது அதிகம் நடந்தது . பெண்களும் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்கின்றனர் . 

பலூன் படத்தில் வேலைக்கு சென்று விட்டு களைப்பாக வரும் அஞ்சலி , ஜெய்யிடம் சொல்லும் அந்த வசனம் நிகழ்காலத்தில் வேலைக்கு செல்லும் அனைத்துப் பெண்களின் குரலாகவே நான் பார்க்கின்றேன்.  படம் பார்த்தவர்க்ளுக்கு அந்தக் காட்சி ஞாபகம் இருக்கும் , ஜெய் இயக்குனர் ஆவதற்கான முயற்சியில்  திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார், வேலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் அஞ்சலி அவரிடம் , நீ சீக்கிரம் இயக்குனராகி சம்பாரிக்க ஆரம்பி , நான் வேலையை விட்டு விட்டு குழ்ந்தை பெற்றுக் கொண்டு வீட்டில் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்  என்று கூறுவார். என்னை மிகவும் பாதித்த காட்சி . அஞ்சலியின் இந்தப் புலம்பல் ,வேலைக்கு செல்லும் பல்வேறு பெண்களின் குரல் . 


பெண்களுக்கு கம்ப்யுட்டர் வேலைகள் , கொடுக்கும் மன அழுத்தம் நீண்ட காலம் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அதுவும் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் குழந்தைப் பேறுகால விடுமுறையினை ஒரு வருடத்திற்கு மேல் சம்பளத்துடன் கூடிய விடுப்பாக வழங்க வேண்டும் .

ஆண்களால் உடல் மனம் சார்ந்த வேலைகளை பல மணி நேரம் செய்ய இயலும் , பெண்களால் அவ்வாறு செய்ய இயலாத. இது பிற்போக்குத்தனமான கருத்து அல்ல , இது மருத்துவ அடிப்படையில் நிருபிக்கப்பட்ட ஒன்று. இதை விட முக்கியமான ஒன்று வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்து பெருமூச்சு விடுகின்றனர் . ஆனால் முன்பெல்லாம் வேலைக்குப் போகும் பெண்களைப் பார்த்து   வீட்டில் இருக்கும் பெண்கள் தான் பெருமூச்சு விட்டனர் . 

தீர்வென்று பார்த்ததில் நிறுவனங்கள் பெண்களின் திறமையினை உடல் உழைப்பு சார்ந்து  அதிகம் பெறாமல் அவர்களுக்கு தகுந்த வேலையினை கொடுக்க வேண்டும் 

பலூன் பட இயக்குனருக்கு பாராட்டுக்கள், ஒரு நிமிடக் காட்சியாக இருந்தாலும் மிக அருமையாக தன்  சமுகப் பங்களிப்பினை செய்திருக்கின்றார்.

நன்றி 
செங்கதிரோன்