Tuesday, April 18, 2017

நீயா நானா பொய் பரப்புரைகள்;

அமெரிக்காவில் 3% சதம் மட்டுமே விவசாயம் செய்கின்றார்கள் . இது போன்ற கருத்தை பிரேம் என்ற ஒருவர்  தெரிவிக்கின்றார். இது எல்லோருக்கும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கக் கூடிய கருத்தாக இருக்கும்.ஆனால் வருடத்தில் ஆறு மாதம் குளிர் நிலவக்கூடிய பிரதேசத்தில் 3%சதம் தான் விவசாயம் நடக்கும் . வருடம் முழுதும் விவசாயம் செய்வதற்கேற்ற நிலபரப்பினை வைத்துள்ளோம், அப்படியிருக்க நாம் ஏன் அமெரிக்கா போல. இருக்க வேண்டும்? 

அறிவாளி பிரேமின் கருத்தினையும், அதற்கான என் எதிர்வினையையும் கீழே உள்ள காணொளியில் பாருங்கள் .



விவசாயம் காப்போம்.

நன்றி
செங்கதிரோன் 

ஐந்து முதலைகளின் கதை: புத்தக மதிப்புரை

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப  வெளிநாட்டில் தொழில் செய்ய போனவர்களை  பற்றிய கதை.  

சீனர்கள் ஆண்மை விருத்திக்காக எதையும் சாப்பிடுவார்கள். அப்படி அவர்கள் விரும்பி சாப்பிடுவது தான் வெள்ளை அட்டை சூப். நம்ம ஊரில் கிடைக்கும் கருப்பு அட்டை போன்று தைமூரில் வெள்ளை அட்டை வெகுவாக கிடைக்கும். அதனை கொண்டு சூப் தயாரித்து விற்பனை செய்யலாம் வியாபாரம் பண்ணலாம்  என்று எண்ணி அவர்கள் வருகின்றனர். அப்படி வந்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அந்த ஊரில் வெள்ளை அட்டை மிகவும் குறைவாகவே இருந்தது மற்றும் அந்த ஊர் மிகவும் செல்வச் செழிப்பான நாடாக இல்லை. மிகவும் வறுமையுள்ள நாடாகவே தென்பற்றது. இதனை அறிந்த அவர்கள் சில நாட்கள் அங்கேயே தங்கி அடுத்ததை பற்றி சிந்திக்கின்றர். அவர்கள் அங்கே தங்கியிருந்த வேளையில் அங்கே தொழில் செய்து கொண்டிருந்த இந்திய தொழிலதிபர்களை சந்திக்கின்றனர். இங்கிருந்து சென்றவர்களுக்கு அங்கே உள்ள தொழிலதிபர்களுக்கும் நடக்கும் நட்பு, பகை மற்றும் பல ஸ்வாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே இந்த கதை.


வணிகத்தில் ஈடுபட்டிருப்போரும் வணிகத்தில்  ஈடுபடவிருப்போருக்கும் இந்த புத்தகம் மிகவும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழும். வணிகத்தில் ஈடுபட்டிருப்போர் பல இடங்களில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேரடியாக படித்துப்பார்த்து போல் உணர்வார்கள். அவர்களால் பல சந்தர்ப்பங்களில் தங்களை பொருத்திப்பார்க்க முடியும். எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய இந்த புத்தகம்  உயிர்மை  பதிப்பகத்தில்  கிடைக்கும்.

விலை ரூ.150.

நன்றி 
செங்கதிரோன்