Wednesday, September 23, 2015

குழந்தைகளுக்கான கழனியூரனின் இரவு நேரக் கதைகள்

சில மாதங்களுக்கு முன்னர்  அமெரிக்காவில் உள்ள என் நண்பனுடன் மெசெஞ்சரில் (Messenger ) உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவன் , மச்சி என் பொண்ணுக்கு தூங்க செல்லும் முன் கதை சொல்லும் நேரம் என்று சொல்லி நாளைக்குப் பேசலாம் , என்றான்  நான் கேட்டேன் என்ன கதை சொல்லுவாய் என்று, அவன் அந்தப் புத்தகங்களின் புகைப்படங்களை அனுப்பினான். அனைத்தும் ஆங்கில புத்தகங்கள். 

பின்னர் எனக்கு கழனியூரனின் "மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்" என்ற புத்தகத்தினை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிராமியக் கதைகள் என்று எண்ணித்தான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அனைத்தும் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி சொல்லுவதாக அமைக்கப்பட்டிருக்கும் நீதிக் கதைகள் .



பெரும்பாலான கதைகள் ஒரு பக்கம் இரண்டு பக்கங்களே கொண்டவை , பலவேறு கிராமிய சார்ந்த சொற்களும் , பழக்க வழக்கங்கள் குறித்த செய்திகளும் ஏராளம் உள்ளன. எனவே நகரங்களிலும் வெளிநாடுகளிலும் வசிப்பர்வர்களின் குழந்தைகள் நம் நாட்டைப் பற்றி  புதுபுது செய்திகளை அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் பயன்படும் .நீதிக் கதைகள் நிறைய இருப்பதால்  நல்லொழுக்கம் இயல்பாக வளர இந்தக் கதைகளை அவர்கள் கேட்பது மிக உதவியாக இருக்கும்.

மொத்தம் 111 கதைகள் கொண்ட இப்புத்தகம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.175.

இந்தப் புத்தகத்தினை குழந்தைகளுக்கான பிறந்த நாள் பரிசாகவும் கொடுக்கலாம்.

கழனியூரன்