Friday, April 17, 2020

எனக்கு ஒரு பர்ஸ் வேண்டும்- சிறுகதை


டேய் அண்ணா அமேசானில் ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன் என் பர்ஸ் ரொம்ப கிழிஞ்சு போச்சு அதனால நா அனுப்பிச்சியிருக்கற லிங்க்ல ஒரு பர்ஸ் இருக்குடா அது எனக்கு வாங்கி அனுப்பு.

ஓகேடா லிங்க் பாத்துட்டு கூப்பிடுறேன்.

என்ன இவ்வளவு விலை போட்டிருக்கு இவனுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பர்ஸ். டேய் தம்பி!! இவ்ளோ காஸ்ட்லி பர்ஸ் உனக்கு எதுக்குடா, முடிஞ்சா காசு சம்பாதிச்சு நீயே அந்த பரிசை வாங்கிக்க 

இப்படி ஏமாத்திட்டானே, என்ன பண்ணலாம் வெறுப்பா இருக்கு, ஏதாவது ஏதாவது காமெடி பாப்போம்

எவ்வளவு நாளைக்குத்தான் இந்த வடிவேலு கவுண்டமணி வீடியோ பார்க்கிறது வித்தியாசமா ஏதாவது பார்ப்போம்.

சதுரங்க வேட்டை காமெடியா சரி பார்ப்போம்
“”ஒருத்தனை ஏமாத்தினும்னா அவன்கிட்ட கருணையே எதிர்பார்க்கக்கூடாது அவன் ஆசையை தூண்டனும்””

வாவ் கண்டுபிடிச்சுட்டன் அண்ணன்கிட்ட எப்படிப் ஏமாத்தி பர்ஸ் வாங்குவதுனு, டேய் அண்ணன் காரா உனக்கு வைக்கிறன்டா ஆப்பு 


ஹலோ அண்ணா என்ன சாப்டியா? 
டேய் நீ என்ன நடிச்சாலும் நான் உனக்கு பர்ஸ் வாங்கி கொடுக்க மாட்டேன்டா?

அது இல்லடா அண்ணா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு, நீ ரொம்ப ராசிக்காரன் டா போன முறை நீ ஒரு பர்ஸ் வாங்கி கொடுத்த அதனாலதான் கொஞ்சம் காசு தங்குச்சு , அதான் இப்பவும் உன்னையே மறுபடியும் பர்ஸ் வாங்கி தரச் சொல்றேன். என்கிட்ட காசு இல்லாம இல்ல நீ வாங்கி கொடுத்தா நான் நல்லா பணம் வச்சி இருப்பேன் , நான் பெரிய ஆளா ஆனா உனக்குதான்டா பெருமை ( 1000ரூ பர்ஸுக்கு எவ்வளவு பிட் போட வேண்டி இருக்கு) 

டேய் தம்பி அட இவ்வளவு பொறுப்பாய்டியே டா எனக்கு ஆச்சரியமா இருக்கு டா டேய்

உடனே ஆர்டர் பண்றேன் டா உனக்கு டெலிவரி confirmation வரும் மொபைலை செக் பண்ணு

Thanks da 

எப்பா சதுரங்வேட்டை டைரக்டர் செம ஐடியா கொடுத்தப்பா 
எங்க அண்ணன் காரன் எவ்ளோ பெரிய ஆளு அவனே உன் படத்தோட ஒத்த வசனத்துல அவனை ஏமாரவைச்சுட்டியே 

நன்றி 
செங்கதிரோன்

ஊழல் உளவு அரசியல் ; சவுக்கு சங்கர் புத்தக விமர்சனம்


சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரின் கூர்மையான அரசியல் விமர்சனத்தை தொடர்ந்து படித்து வருவதனால் ஏற்பட்டது.

இந்த புத்தகம் அவரின் சுயசரிதை அல்லது வாழ்வியல் போராட்டம் என்று எடுத்துக்கொள்ளலாம்.




முகப்புத்தகத்தில் அவர் இடும் நக்கல் பதிவுகளை வைத்து அவரை மிக சாதாரணமானவராக எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் இந்த புத்தகம் படித்தால் அவர் குறித்த ஒரு உயரிய மதிப்பு ஏற்படும். 


ஆங்கிலம் கற்றுக்கொள்ள எடுத்த முயற்சிகள், பரந்துபட்ட புத்தகம் வாசிப்பு, , உயர் அதிகாரிகளுக்கு எதிரான போராட்டம் , சிறை வாழ்க்கை என்று அவர் இளம்வயதில் செய்த அனைத்தும் மிக அசாத்தியமானவை. ஆனால் அவருக்கு நடந்த துயரமான நிகழ்வுகள் வேறு யாருக்கும் நடக்க கூடாது.

2010 முதலே அவரின் வலைப்பக்கத்தில் பல கட்டுரைகள் படித்து இருந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை இந்தப் புத்தகம் படித்து தான் அறிய முடிந்தது.



நன்றி
செங்கதிரோன்

பேட்டை: நாவல்

பேட்டை நாவல் 
எழுதியவர் ;தமிழ் பிரபா 

நாம் வாழும் பகுதியில் பல்வேறு விசித்திரமான சம்பவங்கள் நடக்கும், பல்வேறு விசித்திரமான மனிதர்கள் வாசிப்பார்கள் அவர்கள் குறித்து ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும் , சிலர் தான் அதை செய்வார்கள். சுஜாதாவின் ஶ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகம் அது போன்றதொரு அருமையான புத்தகம். 

பேட்டை நாவலின் மையக் கதாபாத்திரம் மெட்ராஸ் பட நாயகன் கார்த்தி போன்ற ஒரு இளைஞன் . அவன் சிறு வயதில் இருந்து நடக்கும் சம்பவங்கள் தான் இந்த புத்தகம்.

மொத முப்பது பக்கம் படிக்கறதுக்குள்ள ஒரு வழியாயட்டேன். ஏன்னா முழுக்க முழுக்க மெட்ராஸ் பாஷை , ஒண்ணிமே பிரியில. இதுல புத்தகத்தின் கடைசியில் அந்த வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்து . அதனால் தான் மிக எளிதாக தொடர்ந்து வாசிக்க முடிந்தது .


எழுதியவர் மிக இளவயதுக்காரர் தான் இருப்பினும் மிக சிறப்பாக விவரித்து எழுதி இருக்கின்றார். கடைசிப்பகுதி தான் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தது.

நட்பு , காதல் போன்றவை குறித்த கதைகளை படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் கண்டிப்பாக பிடிக்கும். 

இந்தப் புத்தகத்தின் கதையினை முழுதும் சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து விடும், அதனால் தான் விரிவாக சொல்லாமல் ஒற்றை வரியில் சொல்லி விட்டேன்.

நன்றி
செங்கதிரோன்

கவுண்டர்களின் பொற்காலமா எடப்பாடி பழனிசாமி ஆட்சி ?


“காட்டை வித்துக் கள்ளு குடிச்சவன் கவுண்டன்” என்ற நிலையிலிருந்து “நாட்டை ஆளும் நிலைக்கு”கவுண்டர் வந்ததை ஒட்டியே இந்த கட்டுரையின் தேவை இருக்கின்றதுஇந்தியபவில் . காமராஜர் காலத்தில் நாடார்களுக்கு தொழில்கள் தொடங்க பல்வேறு சலுகைகள் கண்ணபிக்கப்பட்டதாக சொல்வார்கள் . ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் சமூகம் சார்ந்தவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கின்றாரா என்று தெரியவில்லை. இருப்பினும் கவுண்டர்களுக்கு உள்ளூராவோ அல்லது வெளிப்படையாகவோ எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.

வரலாற்று பாட புத்தகத்தில் சோழர்கள் , சந்திரகுப்தர், மௌரியர் , முகலாயர் என்று பலரின் பொற்கலங்களைப் படித்திருப்போம். தற்போது இந்தியா முழுமைக்கும் சாதி சார்ந்தவர்களின் வெற்றி பெருமளவு கொண்டாடப்பட்டு வருகின்றது . 

கவுண்டர்களைப் பொறுத்தவரை அவர்கள் தொழில் துறையில் பல ஆண்டுகளாகவே முன்னணியில் இருக்கின்றனர் . பணம் மற்றும் வெளியுலக தொடர்புகளினால் தங்கள் சாதி குறித்த பெருமிதங்களை பொது வெளியில் கொண்டாடியதில்லை. 

தொழில் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்ட நாடார்கள் சாதி சங்களையும் அதனூடாகவே வலுவாக அமைத்தனர். ஆனால் கவுண்டர்கள் அப்படியான சங்கங்களை அமைக்கவில்லை. இது அவர்களின் பரந்து பட்ட மனப்பாண்மையா அல்லது அவ்வாறு அமைக்க நல்ல தலைமை இல்லயா என்று தெரியவில்லை.

இப்பொழுது எடப்பாடி ஆட்சி நடப்பதை ஒட்டி மட்டுமே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது. தற்பொழுது ஈஸ்வரன், தனியரசு போன்றவர்கள் கவுண்டர் சமூக இளைஞர்களை மையப்படுத்தி சாதி சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை செய்கின்றனர் . அவை கொங்கு மணடலத்தின் கிராமங்களில் வசிப்பவர்களிடம் நல்ல செல்வாக்குடன் உள்ளதாகவே தெரிகிறது.

நன்றி 
செங்கதிரோன்

கனடாவில் ஒரு குட்டி தமிழ்நாடு


கனடாவின் அனைத்து மாகாணங்களும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரே ஒரு மாகாணம் மட்டும் பிரெஞ்சு மொழியை தீவிரமாக முன்னெடுத்து தனித்து வாழ்கின்றது .
கனடாவின் மிகப்பெரிய மாநிலமான கியுபெக் , இங்கு பிரெஞ்சு நாட்டவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். 

தங்கள் மொழிப்பற்றின் மூலம் கனடாவில் தனித்து தெரிகின்றனர். தமிழ்நாடு போலவே மற்ற மாநில கனடியர்கள் கியுபெக் வரும்போது பிரெஞ்சு மொழி தெரியாமல் அவதிப்படுவார்கள்.

தமிழ்நாடு போலவே இங்கும் பிரெஞ்சு பேசுபவர்களுக்கான தனி நாடு கேட்கும் குரல் இன்றும் வலுவாக ஒலித்து வருகின்றது. 

இருப்பினும் தேசிய சிந்தனை உடைய பிரெஞ்சு இனத்தவரும் அதிகம். அதற்கு உதாரணம் தான் , கனடிய பிரதமர் ஜஸ்டின் . பிரெஞ்சு இனத்தவராக இருந்தாலும் , தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டு தற்பொழுது பிரதமராக இருக்கின்றார் .

நன்றி 
செங்கதிரோன்