Wednesday, August 3, 2016

நிஜ வில்லன் சிவகுமாரும் நிழல் வில்லன் சத்யராஜும்

நிஜ வில்லன் சிவகுமாரும் நிழல் வில்லன் சத்யராஜும் 

சிவகுமார் போல நல்லவரை நீங்க பத்திரிக்ககைகளில் மட்டும் தான் பார்க்க முடியும் ,நிஜத்தில் அவர்  மிகப்பபெரிய வில்லன் என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கதான் இந்தப் பதிவு. மிகப்பெரிய சுயநலமும் சாதிவெறியும் கொண்ட ஒருவரை மனிதருள் மாணிக்கமாக சித்தரிக்க அவரும் அவருடன் இருப்போரும் முயற்சிக்கினறனர்.



வைரமுத்து தேவர் சாதி வெறி கொண்டவர்  என்பதனை திரும்ப திருமப் சொல்லும் இந்த சமூகம் கொங்கு மாமணி என்று கவுண்டர்களிடம் இருந்து பட்டம் பெற்ற இவரை சாதி வெறியாளராக ஏன் அடையாளப்படுத்தவில்லை என்று புரியவில்லை. 

தன்  மகன் வேறொரு மதம் சார்ந்த பெண்ணை (ஜோதிகா)  காதலித்த போது  அதனைத் தடுக்க மேற்கொண்ட அவர் முயற்சிகள் அனைத்தும் இப்பொழுது கிராமங்களில் நடக்கும் ஆணவக் கொலைக்கு ஒப்பானவை. நன்கு படித்த பண்பாளர் காதலுக்கு இப்படி மூர்க்கததானமான எதிர்ப்பினை சாதி என்ற அடையாளத்தை தன் சந்ததி இழந்து விடக்கூடாது என்ற ஒரே ஒரு அற்ப காரணம் மட்டும் என்றால் அது மிகையில்லை. அந்த சாதி வெறியினை தன் மனைவிக்கும் புகுத்தியிருக்கின்றார் என்பதனை அவர் மனைவி கூறும் இந்த வாசகத்தில் இருந்து நன்கு புரிந்து கொள்ள முடியும்.''ஆரம்பத்துல ஜோவை சூர்யா விரும்புறதாவும், கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வேணும்னு கேட்டப்பவும் ரொம்பப் பயந்தேன். பல நாட்கள் அழுதுட்டே இருந்தேன்



சாதி வெறி மட்டுமா , மிகப்பெரும் சுயநலப் பேர்வழி என்பதனை நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் நீங்களே உணந்திருந்திருக்க முடியும் .இது வரை எந்த ஒரு நடிகர் சங்க விழா மற்றும் தேர்தல்களில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யாமல் இருந்த இவர் , தன் மகன் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு நின்றவுடன் எல்லா மேடையிலும் தோன்றி வாய்கிழிய பேசிய பேச்சினை தமிழ்நாடே பார்த்தது .மகன் அன்புமணியை  முன்னிறுத்த ராமதாஸ் செய்ததற்கும் சிவக்குமாரின் செயல்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 


இதற்கும்ஒருபடி மேலே போய் சரத்குமாரைப் பற்றி இழிவாக அவர் மனைவி ராதிகாவிடமே கூறி இருக்கின்றார். உன் கணவனால் தான் உன் நிறுவனம் நட்டம் அடைந்ததா என்று நா கூசாமல் கேட்டிருக்கின்றார் இந்தப் பெரிய மனிதர். அதுவும் இவர் குடும்பத்திலேயே ஞானவேல் ராஜா என்னும் கருப்பை வெள்ளையாக்கும் உத்தம ராசாவினை அருகில் வைத்துக் கொண்டே இப்படி அடுத்தவர் குடும்பத்தை வம்பிழுதந்திருக்கின்றார்.

இதற்கு மேலும் இந்த நல்லவரைப் பற்றி எழுதினால் என்னுடைய கீ போர்டே என்னை அடிக்கும் என்பதால் நிழல் வில்லன் சத்யராஜ் குறித்து பார்ப்போம். பேச்சில் இத்தனை வெளிப்படையான ஒரே ஒரு மனிதர் சத்யராஜ் மட்டுமே , பணம் தான் குறிக்கோள் என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் ஒரு உணமையான உத்தம வில்லன். தன மகன் காதல் திருமணத்திற்கு தடையாக இல்லாமல் அவர்களை சேர்த்து வைத்து அழகு பார்த்தவர். தன் மகனை முன்னிறுத்த எந்த குறுக்கு வழிக்கும் செல்லாத ஒரு சுயமரியாதை போராளி.தன் சுய சாதி அடையாளத்தை முற்றிலும் துறந்து கருப்பு சட்டை அணிந்து துணிச்சலாக களத்தில் நிற்கும் ஒரு நிஜப் போராளி சத்யராஜ்.

சத்யராஜுக்கு சிவகுமாருக்கும்  உள்ள வித்தியாசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ,அந்த அளவு தன கொள்கைகளால் சத்யராஜ் மிக உயரத்தில் இருக்கின்றார்.

நன்றி 
செங்கதிரோன்