Tuesday, November 22, 2016

வெளிநாட்டு வாழ்க்கை சொர்க்கத்தில் நரகம் : அரக்க சமையல்


வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யங்களையும், தனிமை ஏற்படுத்தும் கஷ்டங்களையும் சொல்லும் நோக்கில் எழுதும் புதிய தொடர். இந்த பகுதியில் சமையல் குறித்த சில எண்ணங்கள் 

1.அது என்ன அரக்க சமையல் ? வெட்ட வெளியில் பல ஆண்கள் கூடி சமைத்தால் அது கூட்டாஞ்சோறு , அதுவே வெளிநாட்டில் வெகு சில ஆண்கள் அல்லது ஒரே ஒரு ஆண் சமைக்கும் அந்த முறைக்கு பெயர் தான் அரக்க சமையல்.

2. சமைப்பதில் அனுபவமே இல்லாத ஆண் , சமையலில் இறங்கும்போது உப்பு, காரம் அனைத்துமே அள்ளி அள்ளி போடுவார்கள் 

3. எந்த ஒரு முறைமையும் இருக்க்காது ,உதாரணத்திற்கு முதலில் வெங்காயம் பிறகு தக்காளி என இல்லாமல் மாறி மாறி போடுவது , அது மட்டுமன்றி , மசாலா தூள் போடும் அளவு தெரியாமல் ஒரு பாக்கட்டையே ஒரே ஒரு குழம்பில் கொட்டுவது என பல்வேறு சமையல் விதிகளை மீறி சமைப்பார்கள். மிக முக்கியமாக ஒரு ஆளுக்கு சமைக்க எவ்வளவு தேவை என்பன போன்ற அளவு தெரியாததால் ஒரே நேரத்தில் ஒன்பது பேர் சாப்பிடும் அளவுக்கு சமைத்து அதையும் சாப்பிட முடியாமல் வீணாக்குவார்கள்.


4. நம்மூரில் உள்ளது போல் அல்லாமல் வெளிநாடுகளில் முழுக்க முழுக்க மின்னனு அடுப்புகள் தான் , எனவே அவற்றில் பல சமயங்களில் நெருப்பினை அதிகம் வைத்து (Heat ) உணவு பாழாவதும் நடக்கும்.

5.ஆணுக்கு மிக மிக சரியாக சமைக்க தெரிந்த ஒரே உணவு சாதம் வைப்பது தான் . சொல்லி வைத்தது போல அனைத்து ஆண்களும் இதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்கள் .

மேலே சொன்ன அனைத்தும் தனியாக சமைத்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு தவறான ஒன்றாகவே தெரியாது . ஒரு பெண் அவன் வாழ்வில் வந்த பிறகு தான் , இவ்வளவு நாளும் அரக்க சமையல் தான் செய்து கொண்டிருந்தோம் என்ற உண்மை தெரிய வரும். பெண்களும் சமையலில் தவறுகள் செய்வார்கள் , எப்படி என்றால் நாம் எல்லாவற்றையும் (உப்பு, காரம் , காய்கறி) அதிகமாக போட்டால், அவர்கள் மேற்சொன்ன அனைத்தையுமே மிக மிக குறைவாகவே போடுவார்கள்.

ஆனாலும் அவர்கள் செய்யும் சிறு சிறு மாற்றத்தினால் உணவுக்கு கூடுதல் சுவை கிடைக்கும். தனியாக சமைக்கும் ஆண்கள் சாம்பார் வைத்தவுடன் வேலை முடிந்தது என்று நினைப்பார்கள் , ஆனால் உணவு சமைத்த முடித்த உடன் இறுதியாக தாளிப்பு என்ற ஒன்றினை செய்வார்கள் . இது போல பல உதாரணங்களை  கூறலாம். 


தல அஜீத் பிரியாணி சமைப்பதில் தேர்ச்சி பெற்று விளங்குவது போல் நம் நட்பு வட்டாரத்திலும் பல் உணவு ஸ்பேசிலைட் இருப்பார்கள்.

இது ஆண் சமையலை கிண்டல் செய்ய எழுதப்பட்டதல்ல , மாறாக ஆண் சமையல் முறை எவ்வாறு இருக்கும் என்பதனை படம்பிடித்துக் காட்டும் பதிவு மட்டுமே.

நன்றி 

செங்கதிரோன் 

பின் வாசல் வழியாக நுழையும் பாஜக

இடைத்ததேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறனது. ஏன் மாபெரும் வெற்றி என்று குறிப்பிடுகின்றேன் என்றால் ,அதிக அளவு பிரச்சரம் கிடையாது , ஆள் பலம் கிடையாது ,ரூபாய் நோட்டு பிரச்னை இவை அனைத்தையும் மீறி அது பெற்ற வாக்குகள் மிக கவனிக்கவேண்டிய ஒன்று . நீட காலம் இருந்துவரும் பாமக , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது மிகப்பெரும் பின்னடைவு . 


பாஜக தொடந்து இது போன்று மூன்றாம் இடத்தினை வரும் தேர்தலிகளிலும் பெற்றால் மேற் சொன்ன கட்சிகளை தமிழகத்தில் காணாமல் போகும் நிலை வரலாம். உயர் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் நாயகனான மோடி இப்பொழுது தொடர் பிரச்சாரங்கள் மூலம் கிராமத்து இளைஞர்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார் என்றே இந்த வாக்குகளின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. விஜயகாந்த் வட மாவடத்தில் உள்ள இளைஞர்களை தன் வசப்படுத்த சில காலம் செல்வாக்கு பெற்று விளங்கியது போல , மோடியை முன்னிலைப்படுத்தி பாஜகவும் வட மாவட்டத்தில் காலூன்றப் பார்க்கின்றது. தங்கள் சமுதாய இளைஞர்களை இப்படி வழி தவறி செல்லாமல் தடுக்கும் பணியில் உடனடியாக அந்தந்த தலைவர்கள் களத்தில் இறங்குவது நல்லது. இடைத்தேர்தலில் பாஜக பெற்ற மூன்றாம் இடத்தினை , வருங்காலத்தில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பெற விடாமல் தடுத்தால் தான் நம் இளைய சமூகம் காக்கப்படும். முன் வாசலில் நின்று கொண்டு திராவிடத்தை வீழ்த்த போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் பினவாசல் வழியாக பாஜக எளிதாக நுழைந்து கொண்டிருக்கின்றது. 

நன்றி 
செங்கதிரோன்
Saturday, November 19, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரியின் தோல்வி எப்படி நிகழ்ந்தது?
வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளும் தன்னை சுற்றி வைத்து இருந்த ஒருவர் தோல்வி அடையும் நிகழ்வுகள் விளையாட்டு , சினிமா , வணிகம் அனைத்திலும் நடக்கும். அதுவே தான் ஹிலாரிக்கும் நடந்தது. வெற்றிக்கு சாதகமான் அம்சங்கள் அனைத்துமே அவருக்கு தோல்வியினை ஏற்படுத்தும் காரணிகளாக மாறிவிட்டது தான் சோகம். அவற்றில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. முதல் பெண் வேட்பாளர்: அமெரிக்க மீன்கள் அனைவருமே இவரை ஒரு பெண்கள் முன்னேற்றத்த்திற்கான முன்மாதிரியாக பார்க்கவே இல்லை. ஏனென்றால் அடிமட்டத்த்தில் இருந்து ஒரு பெண் தனியாக போராடி மேலே வரும்  ஒருவரை தான் அனைவருமே கொண்டாடுவார்கள். ஆனால் ஹிலாரி நடுத்தர குடும்பப்பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் , அவரின் அரசியல் வளர்ச்சிக்கு அவரின் கணவரும் முன்னாள் அமெரிக்க அதிபருமான கிளிண்டனின் பங்கு மிக முக்கியமானது. எனேவ அவரை முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடைமொழிக்குள் வைத்து பெண்களால் கொண்டாட இயலவில்லை. நம் நாட்டில் மம்தா ,மாயாவதி போன்றோர் இவ்வாறுதான் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து முதலமைச்சரானார்கள் .

2. ஒபாமா:  ஒபாமாவின் ஆதரவு ஹிலாரிக்கு மிக பக்க பலமாக இருந்திருந்தாலும் , ஒபாமா தொடந்து இரண்டு முறை ஆட்சி செய்து அதே கட்சியில் இருந்து ஹிலாரி இன்னொரு முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கேட்டதே அவருக்கு ஆப்பாக அமைந்து விட்டது. ஏனென்றால் உலகை உய்விக்க வந்த கடவுள் போல கொண்டு வரப்பட்ட ஒபாமா பெரிய அளவுக்கு எந்த மாற்றமும் அமெரிக்காவில் நடக்கவில்லை என்பது தான் நிதர்சனம். மாற்றம் விரும்பிய மக்கள் ஹிலாரியை புறக்கணித்து விட்டார்கள்.

3. பில் கிளிண்டன்: அமெரிக்காவை இரண்டு முறை ஆட்சி செய்தவரின் மனைவி என்பதனால் நிறைய ஆதரவு கிடைத்த. அந்த ஆதரவு தளத்தினை நசுக்கும் விதமாக கிளிண்டன் ஆட்சி காலத்தில் நடந்த தவறான நிர்வாக முடிவுகளின் விளைவுகளையும் ஹிலாரியின் தோல்வியாக ,டிரம்ப் தொடந்து முன்னிறுத்தினார். அந்த அணுகுமுறை டிரம்புக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்தது (கிளிண்டன் கொண்டு வந்த நாப்டா ஒப்பந்தத்தினால்   தான் அமெரிக்கர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டது என்ற குற்றசாட்டினை தொடர்ந்து பிரச்சாரங்களில் பதிவு செய்தனால் ஹிலாரிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது)இது போல ஏராளமான காரணங்கள் இருப்பினும் மேற்சொன்னவை தான் ஹிலாரியின் தோல்விக்கு மிக முக்கிய காரணிகளாக அமைந்தன.

 நன்றி
செங்கதிரோன்

Thursday, November 17, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு:

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு:


1.அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இந்தியர்களுக்கான ஆர்வம் குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் "எலி தான் காயுதேன்னா எலி புழுக்கை ஏன்டா காயனும்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

2.ஏன் அவ்வாறு சொல்கின்றேன் என்றால்  அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதங்களில் இந்தியா என்ற ஒரு நாட்டைப் பற்றி ஒரு வார்த்தை கூட டிரம்போ , ஹிலாரியோ பேசவே இல்லை.

3. அமெரிக்க அதிபர்  தேர்தல் விவாதங்களில்  முக்கிய இடம் பிடித்த  நாடுகள்: ரஷ்யா, சீனா , ஈரான் , மெக்சிகோ ,சவுதி அரேபியா (எனவே அந்த நாட்டு மக்கள் தான் இந்த தேர்தலில் அதிக ஆர்வமாக இருந்திருக்க வேண்டும்)

4. டிரம்ப்  நேரடியாக  இஸ்லாமிய அமைப்புகளின் மேல் குற்றம் சாட்டுவதால் தான்  இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் அவருக்கு தாங்களாக முன்வந்து ஆதரவு கொடுத்தனர். இந்து அமைப்புகள் எப்போதுமே  இஸ்லாமியர்களுடன்  நேரடியாகவே மோதுவார்கள். ஆனால் கிறித்துவர்களுடன் அவர்களின் பொருளாதர பலத்தின் காரணமாக நேரடியாக மோதாமல் மறைமுகமாகவே தாக்குவார்கள்.

5.டிரம்ப் உலகமயமாக்கலுக்கு எதிரானவர் , அதனால் தான் அந்த ஊரில் உள்ள தொழிலாளர்கள் அவரை ஆதரித்தார்கள் என்றொரு பொய்யினை ஒரு சிலர் சொன்னார்கள். ஏன் இது பொய்? வெள்ளையின மக்களில் பெரும்பகுதியினருக்கு உழைப்பை விட நிர்வாகம் செய்வது தான் பிடிக்கும். எனவே தான் ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை இறக்குமதி செய்து அவர்களை பயன்படுத்தி கட்டுமான வேலைகளை செய்தனர். ஆனால் கறுப்பர்கள் சம உரிமை கேட்டுப் போராடி அங்கயே உயர் பதவி வரை வந்து விட்டனர். அடுத்து மெக்சிகோ மக்களை இது போன்று குறைந்த ஊதியத்துக்கு விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகின்றனர். மாறாக  அமெரிக்காவில் அவர்களின் வேலையை அதிகம் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் என்பது தான் நிதர்சனம்.

6. டிரம்பின் பெண்கள்  குறித்த தவறான கருத்துகள் விவகாரம் ஏன் பெரிதாக எதிரொலிக்கவில்லை:மிகப் பெரும் பணக்காரர் மற்றும்  மூன்று மனைவி கொண்ட டிரம்ப் பெண்கள்  குறித்த பேசும் பேச்சுக்களில் நமக்கு எந்த ஆச்சரியமம் இல்லை. நம்மூரில் உள்ள இந்து அமைப்புகள் இந்த உளறல்களை நியாயப்படுத்தி பேசும் பேச்சுக்களை தான் ஆய்வுக்குரியது. முதலாவது இந்து அமைப்புகளுக்கும் பெண்கள் என்பது குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் மட்டுமே , எனவே தான் அவர்கள் டிரம்பை ஆதரிக்கக் கூடும்.

டிரம்பின் வெற்றியோ ,ஹிலாரியின் தோல்வியோ இந்தியாவை துளியளவும் பாதிக்காது  என்பது தான் நிதர்சனம்.

டிரம்பின்  வெற்றிக்கு பின்னர்  அவரை எதிர்த்த அனைவரும் அவர் குறித்த நல்ல செய்திகளை தேடி தேடி படிக்க ஆரம்பித்து விட்டனர். இதன் மூலம் தெரிய வருவது என்னவெனில் பிடிக்காத  ஒருவரை திருமணம் செய்த பின்னர் இவருடன் தான் காலம் முழுக்க வாழ்ந்தாக வேண்டும் என்று நிலை வந்தவுடன்  அவரின் நல்ல குணங்களை மட்டும் பார்க்க ஆரம்பித்து  வாழ பழகிக் கொள்ளும் மனப்பான்மைக்கு  அமெரிக்கர்களும் தயாராகி விட்டனர்.

அடுத்த பதிவில் முதல் பெண் அமெரிக்க பெண் வேட்பாளர்  ஹிலாரியின் தோல்வி எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த முக்கிய செய்திகளை பார்ப்போம்அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இந்தியர்களின் பார்வை குறித்து ஒரு நுட்பமான பதிவு: