Friday, July 29, 2016

கபாலி -இனிப்பும் கசப்பும்

சாதாரண சினிமா ரசிகனையும் சிந்திக்க மற்றும் குழப்பத்திற்கு ஆளாக்க வைத்த ஒரே படம் என்ற பெருமை கபாலி படத்திற்கு உண்டு. கருத்துக்களை எப்பொழுதுமே மீ இனிப்பு கலந்து கொடுக்கும் முறையினை சற்று மாற்றி கசப்பு கலந்து கொடுத்திருக்கின்றார் அண்ணன் ரஞ்சித். பேலியோ உணவு முறையின் நிறுவனர் நியாண்டர்  அவர்கள் படம் குறித்து எழுதிய பதிவில் "கபாலியின் உடையினை வலுக்கட்டாயமாக அகற்றும்போதுபடத்தில் கோயில் திருவிழாவில் ரஜினியை பிடிக்கும் வில்லன்க்கள் அவரை கொல்வதை விட "நீயெல்லாம் கோட்டு போடறதா, கழட்டு" என சொல்கையில் கண்ணீர் வந்தது...இப்படித்தானே பட்டியல் இன மக்களை செருப்பை போடவேண்டாம், சட்டை போடவேன்டாம் என ஒரு காலத்தில் சொல்லியிருப்பார்கள்? கழுத்தில் கத்தி இருக்கும் தருணத்திலும் ராதிகா ஆப்தே "கழட்ட வேன்டாம்" என்கிறார். வலிமிகுந்த காட்சி. ". நாம் அனைவருமே அந்தக் காட்சியினை வில்லன் கதநாயகனின் சட்டையை உருவாவதாக தான் எண்ணுவோம் ,ஆனால் அண்ணன் ரஞ்சித் தலித் சகோதரர்களின் சட்டையை மேல் சாதியினர் வலுக்கட்டாயமாக கழற்றுவதை தான் காட்சியாக வைத்திருக்கின்றார். இந்தக் காட்சியினை பார்க்கும் எந்த தலித் சகோதரருக்கும் தன் சமூகத்திற்கு நடந்த துயரம் கண்முன்னே வைத்து போகும்.இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்க அதிபராக ஒபாமா முதன்முறையாகப் பதவி ஏற்ற போது உலகம் முழுக்க உள்ள கறுப்பின மக்கள் கண்ணீர் வடித்தனர். அடிமை சமுகத்தை சார்ந்த ஒருவன் உலகின் உயர் பதவி அடைந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.


கபாலியில் ரஜினி ,ஜான் விஜய் தவிர்த்து அனைவருமே திணிக்கப்பட்ட ஒரு நாடகத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினர். குக்கூ  படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தினேஷ் இந்தப் படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கின்றார். ஆக்ரோஷமான கலையரசன் ரோபோ போன்ற நடை இறுக்கமான முகம் என்று மிக மிக மோசமான உடல் மொழியோடு நம்மை ஏமாற்றி இருக்கின்றார்.ரித்விகா மற்றும் ஹரி மட்டுமே ரஜினி படம் என்ற பயம் இன்றி தங்கள் இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பெரும்பாலான கதாபாத்திரங்கள் மனதில் நிற்கவே இல்லை. தமிழிகம் வரும்போது அவருக்கு உதவும் ஆட்களின் நடிப்பு கபாலியிடம் பேசுவதைப் போலன்றி சூப்பர் ஸ்டாரிடம் பேசுவதப் போல் தான் இருக்கின்றது. அண்ணன்ரஞ்சித் எதார்த்த படம் எடுப்பதில் வல்லவர் என்பதற்காக இப்படிப்பட்ட எதார்த்தங்கள் கதாபாத்திரத்தைத் தாண்டி அந்த ஆளுமை தான் நம் கண்ணுக்கு தெரிகின்றார்.

 பாலி ரஜினி நம்மை முழுதுமாகக் கவராததற்கான முக்கியக் காரணம் முந்தையப் படங்களில் எல்லாமே ஒரு வெகுளித் தனமோ அல்லது அதீத திமிர்த் தாமோ தான் இருக்கும்.இவை இரண்டும் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை .ஆனால் இப்படத்தில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகவும் முற்றும் துறந்த முனிவர் போலவும் இரண்டு  உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் வள்ளி என்ற படத்தில் வந்த ரஜினி தான் ஞாபகத்துக்கு வருகின்றார். அனைவருக்குமே அந்த உண்மையை மறைத்து முள்ளும் மலரும் ரஜினி போல் இருக்கின்றார் என்று பில்டப் கொடுக்கின்றனர்.




கபாலிப் பட நாயகன் ரஜினி தவிர்த்து மற்ற அனைவருமே இதனை தலித்படம் என்கின்றனர். இதை சொல்ல வேண்டிய ரஜினி ஏனோ அமைதி காக்கின்றார். படம் வெளியான சமயத்தில் அமெரிக்காவில் இருந்ததற்கான காரணம் , இந்தப் படம் குறித்த சாதி மோதல்  ஏதும் வந்து தான் அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ஆனால் ஆளும் கட்சி படைத்தினை வாங்கியதாலும் , டிக்கெட் விலை கொள்ளையினாலும் சாதி குறித்த விவாதம் பின்னுக்குப் போய் விட்டது.

ஆண்டையின் கதையை முடிப்போம் என்பதிலிருந்து ரஞ்சித் சொல்ல விழைவது என்ன ? இவரே ஒத்துக் கொல்கின்றாரா வன்னியர்களும் தேவர்களும் ஆண்டப் பரம்பரை என்று , அப்படி என்றால் அதற்கான ஆதாரம் எங்கே ? அப்படி எந்த ஒரு அறுதியிட்ட ஆராய்ச்சி முடிவுகளும் இங்கே இல்லை என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .இடும் போன்ற அரைகுறையான வசனங்கள் தான் ரஞ்சித்தின் முதிர்ச்சியின்மையினை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.


வீர சேகர் என்பதன் குறியீடு என்ன?


ராதிகா ஆப்தேவை  25 வருடம் கழித்து பார்க்க வரும்போது ரஜினி தலைக்கு சாயம் பூசியிருப்பதற்கான காரணம் , அவர் முன்பிருந்த மாதிரியே இருந்தால் ராதிகா ஆப்தே இவருக்கு பேத்தி மாதிரி தான் இருப்பார் என்பதனை உணர்ந்தே அந்த மாறுதலை செய்திருக்கின்றனர். மற்றபடி ராதிகா ஆப்தே ரஜினி இருவரையும் கணவன் மனைவி என்பதனை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவே முடியாது . மீனா ரஜினிக்கு ஜோடியாக நடித்தபோது கூட சரியாக இருந்தது , ஆனால் ராதிகா ஆப்தே கொஞ்சம்  கூட ஓட்ட வில்லை .இதற்கு ராதிகாவையே ஜோடியாகப் போட்டிருக்கலாம்.


தலித் குறித்த படத்தில் தலித்துகள் மட்டுமே அனைத்திலும் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் வர்ணாசிரம தர்மத்தினை உறுதிப்ப்டுத்துவது போல தான் உள்ளது. எண்ணற்ற திறமை சாலிகள் நிறைந்த தமிழ் சினிமாவில் வெறும் தலித்துகளை கொண்டு மட்டும் தான் பிடிப்பேன் என்பதே அந்தப் படைப்பின் நோக்கமே சசிதறக்கூடிய வாய்ப்புதான் அதிகம் இருக்கின்றது.


இறுதியாக , படம் மிக மிக மோசமானப் படம் அல்ல , கண்டிப்பாக அனைவருமே பார்க்க வேண்டிய ஒரு முக்கிய படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு முழுமையானப் படமாக இல்லாமல் பலவேறு குழப்பங்களையும் கேள்விகளையும் தொக்கி நிற்கும் படமாக இருக்கிறது என்பது தான் உண்மை.

அடுத்து எடுக்க இருக்கும் படங்களாவது அடுத்த சாதிகள் வம்புக்கு இழுக்கும் சொல்ல வந்த கருத்தினை நேரடியாக சொல்ல வேண்டுமென அண்னன் ரஞ்சித் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.



நன்றி
செங்கதிரோன்