Tuesday, February 17, 2015

வரலாறே இல்லாத வன்னியர்கள் .

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான சாதிகளின் வாழ்வியல் முறைகள் பற்றி பல்வேறு படங்களும் புத்தகங்களும் வெளி வந்துள்ளன.ஆனால் தமிழ்கத்தில் பெரும்பான்மை சமூகமாக விளங்கும் வன்னியர்கள் குறித்து எந்த விதமான அழுத்தமான பதிவுகள் இல்லவே இல்லை.

வன்னியர்கள் குறித்த செய்திகள் தற்பொழுது பத்திரிக்கைகளில் வெளிவருவதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான், ஆண்ட பரம்பரை என்று சொல்லும் இவர்கள் அதற்கான எந்த விதமான ஆதாரத்தினையும் முழுமையாக வெளிவிடவில்லை.இருப்பினும் அரசியலில் இயங்கும்   வன்னிய தலைவர்களுக்கு மட்டுமே தங்கள் ஊர் அடையாளத்துடன் இயங்குகின்றனர். (உ-ம் வீரபாண்டி ஆறுமுகம், செஞ்சி ராமசந்திரன், திண்டிவனம் ராமமூர்த்தி  என்று பல பேர்) . இது  ஓரளவுக்கு அவர்கள் ஆண்ட பரம்பரையின் நீட்சி எனபதனை உணர்த்துவதாக உள்ளது. இருப்பினும் தங்களை சோழ, பல்லவ வம்சம் என்று சொல்வதற்கான ஆதாரம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.



இதற்கான முக்கியக் காரணம் அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் பெருமளவு திறப்படத்துறையிலோ பத்திரிக்கைத்துறையிலோ இல்லாததும் இன்றும் பிற்பட்ட சமூக நிலையில் இருப்பதும் ஆகும்.திறமை வாய்ந்த படைப்பாளிகளான பாலா மற்றும் ரஞ்சித் ஆகியோர் தங்கள் சமூகம்  குறித்த பதிவுகளை அழகாக படங்களில் நுழைத்து விடுகின்றனர். அவன் இவன் படத்தில் highness தாங்கள் மனு நிதிச் சோழ பரம்பரை என்று தேவர் வம்சத்தின் பெருமை குறித்து வசனம் வைத்து இருப்பார். மெட்ராஸ் படத்தின் இறுதியில் கல்வி விளிம்புநிலை மக்களுக்கு அவசியம் என்பதனை தெளிவாக சொல்லி இருப்பார். இது போன்ற படைப்பாளிகள் யாரும் அச்சமூகத்தில் இருந்து திரைப்படத்துறையில் இருக்கின்றார்களா என்று கூட தெரிய வில்லை.

அச்சமூக மக்கள் ஆர்வம் காட்டா விட்டாலும் மற்ரவர்கள் முன்வந்து வன்னியர்கள் குறித்த பதிவுகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கலாம். பெரும்பான்மையாக வாழும் சமூகம் குறித்து பார்வைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அவர்களின் தற்பொழுதைய வாழ்வு குறித்து , வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் குறித்து உணமையானப் பதிவினை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்