Saturday, November 29, 2014

ஜாக்கியின் வீடியோ பதிவுகள் எப்படி இருக்கு?

ஜாக்கி ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கின்றார். அதாவது தனது வலைப்பூவில் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தவர் அடுத்து சினிமா விமர்சனங்களை வீடியோ பதிவாக வெளியிட ஆரம்பித்து இருக்கின்றார்.
வீடியோ பதிவுகளில் ஈடுபட்டதன் நோக்கமே தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக என்று குறிப்பிட்டிருக்கின்றார்.தன் திறமைகளை வெளிப்படுத்திக்கொள்ளவும் இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறியிருக்கின்றார்..வெளிநாடுகளில் தங்களையே சுயமாக விளம்பரப் படுத்திக்க்கொள்ளுதல் என்பது மிக சாதாரணமாக நடக்கும். வெளிநாட்டில் நீண்ட நாட்கள் இருந்த இந்தியர்கள் கூட இதனை செய்வார்கள். அதே போல தன்னை பிராண்ட் செய்து கொள்ளவே இந்த வீடியோ பதிவு என்றும் கூறியிருக்கின்றார். இவ்வளவு உயரிய நோக்கங்கள் கொண்ட இந்த முயற்சி குறித்த நமது கருத்தை பதிவு செய்து அவருக்கு ஊக்கமளிக்கவே இந்தப் பதிவு.

 
இந்தப் பதிவில் ஜாக்கியின் வீடியோ பதிவுகள் குறித்த நிறை குறைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.
Pros:நிறைகள்
1. ஒப்பீடு செய்து பார்ப்பது என்பது உலகம் முழுக்கவே இருக்கும் நடைமுறை. ஏற்கனவே இது போன்ற  இருக்கும் ஒருவர் பற்றி பார்ப்போம் நம்ம இமான் அண்ணாச்சி போன்று இருக்கும் நபர் இவர் சாதாரண சென்னை பாஷை போன்றதொரு மொழியில் பேசுவார்.

இவர் படம் குறித்த செய்திகள் மட்டுமே பேசுவார். ஆனால் ஜாக்கியின் வீடியோ பதிவின் சிறப்பே அவருடைய வலைப்பதிவில் எழுதுவது போலவே அந்தப் பட நடிகர் அல்லது இயக்குனர் குறித்த முன் குறிப்பு அல்லது ஜாக்கிக்கும் அந்தப் படத்துக்கும் தொடர்பான ஏதேனும் ஒரு செய்தி சொன்ன பிறகு இப்படம் குறித்து விமர்சனம் செய்வார்.



2. படம் பார்த்த திரையரங்கம் குறித்தும் , ரசிகர்களின் வரவேற்பு குறித்தும் எழுதுவது ஒரு நேரடி ரிப்போர்ட் போன்ற உணர்வைத் தருவது ஜாக்கியின் பதிவின் கூடுதல் சிறப்பம்சம்.

.3. படத்தினைப் பற்றி மிக சுருக்கமாகவும் அனைவருக்கும் புரியும்படியும் ஐந்தே நிமிடத்தில் கூறுவது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் விளக்கியிருக்கின்றார். எனவே இந்தப் படத்தினை பார்க்க செல்லும் முன் தியேட்டர் வாசலில் இருந்து கொண்டே உங்கள் மொபைலில் ஜாக்கியின் விமர்சனத்தைப் பார்த்து விட்டு செல்லலாம்.வெளிநாடுகளில் வசிப்பவர்களும் படம் பார்க்கும் முன் அநதப் படம் குறித்த ஜாக்கியின் வீடியோ பதிவைப் பார்த்த பின் பார்க்கலாம்.

Cons:குறைகள் மிகக் குறைவு தான்.

1. இந்த வீடியோ பதிவுகளை ஏதோ 3டியில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏனெனில் திரை முழுவதையும் ஜாக்கியின் முகம் ஆக்கிரமத்திருக்கின்றது. அவரின் கை அசைவுகள் அல்லது முக பாவனைகள் அவர் என்ன பேசுகின்றார் எனபதனை கவனிக்க இயலாதவாறு சில நேரங்களில் இடையூறு செய்கின்றது.

2.மிக இயல்பாகப் பேசப் போவதாகத்தான் சொன்னார். ஆனால் ஏதோ ஒரு அவசரத்தில் பேசுவது போலவும், முகத்தின் உணர்வுகளில்
 (Expressions)
எந்த ஒரு மாற்றமின்றி பேசுவது போல் தான் இருக்கின்றது. எனவே முக மலர்ச்சியுடன் பேசுவது அனைவரையும் ஈர்ப்பதற்கு வசதியாக இருக்கும் அதுவும் குறிப்பாக பெண்கள் இதனை விரும்புவர்.

3.நிறையில் சொன்னது தான் படம் பற்றி பேசுவதற்கு முன் சொல்லும் செய்திகள் சில நேரம் அலுப்பூட்டுவதாக உள்ளது. எனவே அதனை கொஞ்சம் குறைத்து படம் பற்றி சற்று விரிவாகப் பேசலாம்.அதே போல கொஞ்சமாக அரிதாரம் (makeup) போட்டு கொள்ளலாம். ( இதில் specialist ஆன மனுஷுயபுத்திரனிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள்)

மொத்தத்தில் ஜாக்கியின் இந்தப் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.