Sunday, July 24, 2011

கிரிக்கெட் விளையாட எதிர்ப்பு


கிரிக்கெட் விளையாட எதிர்ப்பு: சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல்

சென்னை பாலவாக்கத்தில் கிரிóக்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், போலீஸார் தடியடி நடத்தினர்.

பாலவாக்கம் கடற்கரைப் பகுதியில் அப் பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வந்தனர். ஆனால் அந்த இடத்தில் கிரிக்கெட் விளையாட காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஞாயிற்றுக்கிழமை அப் பகுதி இளைஞர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு கிரிக்கெட் விளையாட முற்பட்டபோது, போலீஸார் அவர்களிடமிருந்து பேட்,ஸ்டெம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனராம்.

மேலும் போலீஸார், அவர்களை அங்கு கிரிக்கெட் விளையாடக் கூடாது என எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றனராம். இதனால் கோபமடைந்த இளைஞர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்தும் அங்கு வந்த போலீஸார், இளைஞர்களிடம் சமாதானம் பேசினர். ஆனால் இளைஞர்கள் சமாதானம் அடையவில்லை. இதன் காரணமாக சாலையின் இரு புறத்திலும் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் நின்றன.

இதையடுத்து போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிறிது தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த தினமணி செய்தியின் முக்கியத்துவம் என்னன்னா ஜெயலலிதா ஆட்சியில் நடந்தா சிறிய தடியடி ,ஆனா கருணா ஆட்சியில் நடந்த பெரிய தடியடி என்ன நடக்குதுன்னு தெரியலய போங்கயா நீங்களும் உங்க நடுநிலைமையும்

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதுதாங்க அரசியல் தந்திரம்...

செங்கதிரோன் said...

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே ...