Pictures of Gourmet Food

Saturday, December 31, 2011

பதிவுலகம் நேற்று! இன்று!! நாளை !!!


புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே !!! தமிழ் பதிவுலகம் பல கதவுகளை திறந்துவிட்டிருக்கின்றது. அனைத்து தரப்பு தமிழ் மக்களும் ஒன்றிணைக்கும் பாலமாக பதிவுலகம் சென்று கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது.

நாம் அறியாத பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளவும் நம்முள் புதைந்து இருக்கும் திறமைகளை வெளிக் கொணரவும் வாய்ப்பாக அமைந்திருந்தது.
நாம் அலசாத பகுதிகளே இல்லை சினிமா, இலக்கியம், அரசியல் மற்றும் சமூகம் குறித்த விரிவான அலசல் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இவை அனைத்துமே புத்தக தொகுப்புகளாகவும் வந்து பதிவு செய்யப்படுகின்றது.


ஆனாலும் சில சமயங்களில் குறுகிய வட்டங்களிலேயே இயங்கிகொண்டிருக்கொன்றோமோ என்ற உணர்வும் ஏற்படுகின்றது . ஏனெனில் எதிர் பதிவுகள் எழுதுவது,தனி நபர் தாக்குதலில் அதிகம் கவனம் செலுத்துவது, ஹிட்ஸ் களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது என அவசியமில்லாத செயல்களில் மிகுதியான நேரம் செலுத்துவது பயனற்றதாக அமைகின்றது. நான் எழுதிய எதிர் பதிவு கூட சமூகத்தில் சித்த மருத்துவம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதனால் அவற்றை முறையாக விளக்குவதற்காக மட்டுமே எழுதினேன்.

தகுந்த காரணங்களுக்காக எழுதப் படும் இதை போன்ற பதிவுகள் வரவேற்கப்படவேண்டியவை.
ஊடகங்கள் போலவே இங்கும் சினிமா மற்றும் அரசியலே பிரதான இடம் வகிக்கின்றது. நாம் அனைவருமே பதிவுகளை பாரிவையிடுவது ஓய்வு நேரத்தில் என்பதனால் நமக்கு இது போன்ற பதிவகள் மனதிற்கு உற்சாகத்தை அளிப்பதனால் இவை இரண்டும் முதன்மையாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை என்றாலும் சமீப காலமாக எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் மூலம் இளைஞர்களுக்கு தமிழ் படைப்புகளின் மீதான ஆர்வம் புதிய நம்பிக்கையினை அளிக்கின்றது.

ஆனாலும் இது மட்டும் போதுமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அறிவியல் மருத்துவம் மற்றும் பிற மொழிகளின் மீது நம் கவனத்தை அதிகம் செலுத்துவது ஆரோக்கியமான சமூகம் பிறக்க வழி பிறக்கும் என்றே கருதுகின்றேன்
அறிவியலும் மருத்துவமும் நம் வாழ்வின் மிக முக்கியமான அங்கம். இவை இரண்டை பற்றியும் பொதுவான புரிதல் நம் வாழ்வில் மிக பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.அடுத்ததாக பிற மொழிகள்: பாரதியார் சொன்னதை போன்று "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழியையை போல இனிதாவது எங்கும் காணோம்" என்ற உண்மையினை பகுத்தறிய பிற மொழிகளை கற்றுக் கொள்வது சிறந்தது.


அரசியல காரணங்களால் இந்தியை ஒதுக்கிய நாம் பிற மொழிகளையும் ஒதுக்கி விட்டோம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அதிலும் திராவிட மொழிகளான தெலுங்கு ,கன்னடம் ,மலையாள மொழிகள் கூட கற்றுக் கொள்வதில் எவரும் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஆச்சர்யம்மான் ஒன்று. அடுத்தது ஐரோப்பிய மொழிகளான ஸ்பானிஷ்,பிரெஞ்சு,இத்தாலியன் ,ஜெர்மன் போன்ற மொழிகளை கற்றுக் கொள்வதிலும் யாரும் விருப்பமாக இல்லை. ஆனால் வெளி நட்டடைச் சேர்ந்தவர்கள் பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர்.

எனவே வரும் காலங்களில் மொழிகளை பயிற்றுவிக்கும் பதிவுகளையோ அறிவியல் சார்ந்த பதிவுகளையோ எழுத அதனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் முன்வரவேண்டும்.

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

பதிவுக்கு ஒரு சபாஷ்...

மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

செங்கதிரோன் said...

Thanks for your comment

sasikala said...

அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .

செங்கதிரோன் said...

@sasikala: thanks for your comment wish you the same !!!