Pictures of Gourmet Food

Friday, February 22, 2013

தெனாலியை வீழ்த்திய கத்தரிக்காய்:


 வார இறுதி எனபதால் தெனாலி ராமன் குறித்த ஒரு நகைச்சுவைக் கதையினை உங்களுடன்  பகிர்ந்து கொள்கின்றேன் . தெனாலி ராமன் புத்திசாலி என்பதும் அதனால் அரசவையில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகளை மிக எளிதாக தன்  புத்திகூர்மையால் தீர்த்து வைத்துப் புகழ் பெற்றவன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எண்ணெய் கத்தரிக்காயுக்கு ஆசைப்பட்டு மன்னரின் தண்டனைக்கு ஆளாக இருந்த தெனாலி அதிலிருந்து எவ்வாறு மீண்டான் எனபதை நகைச்சுவையுடன் பார்ப்போம்.

பார்ட்டி கலாச்சாரம் என்பது இபொழுது தொடங்கிய ஒன்று என்றே நாமில் பலர் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் மன்னர்கள் காலத்தில்   தற்பொழுது நடைபெறும் பார்ட்டிகளை விட பன்மடங்கு மிகப் பிரம்மாண்டமான பார்ட்டிகள் நடைபெற்றிருக்கின்றன என்பதே உண்மை. அவ்வாறு நடை பெற்ற மன்னர் விருந்தில் கலந்து கொண்ட தெனாலி ராமனுக்கு எண்ணெய்  கத்தரிக்காய் பரிமாறப்பட்டது.

கத்தரிக்காயை உண்ட தெனாலி ராமனுக்கு மனம் நிலை கொள்ள வில்லை. இப்படி ஒரு சுவையான் ஒன்றை தன் வாழ் நாளிலேயே முதல் முறையாக சாப்பிடுவதாக மன்னரிடம் கூறினான். மன்னர் அவனது பாராட்டினை ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் சொன்ன செய்தியினைக் கேட்டு அதிர்ந்து விட்டான். ஏனெனெனில் அந்த கத்தரிக்காய் மன்னர் தோட்டத்தில் மட்டுமே விளைவிக்க படுவதாகவும் வேறு யாருக்கும் அது வழங்கப்படமாட்டாது, இங்கிருந்து அதனை திருடி செல்பவர்களின் கை வெட்டப்படும் என்பதான தண்டனை இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் ஒரு நாள்  தோட்டத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தேவையான அளவுக்கப் பறித்துக் கொண்டு சென்று விட்டான். வீட்டில் தடல் புடலாக கத்தரிக்காய் சமைக்கப்பட்டது. கத்தரிக்கை உண்ட அவனது  மனைவி ஏகத்துக்கும் தன் கணவனைப் புகழ்ந்து தள்ளி விட்டாள் . ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டதாக இவர்கள் எண்ணி இருந்த தருணத்தில் தான் இரவுக் காவலர்கள் தெனாலி வீடு வழியாக செல்லும் பொது காணமல் போன கத்தரிக்காயினை  தெனாலி தான் திருடினான் என்ற உணமையினை கண்டுபிடித்து மன்னனிடம் கூறிவிட்டார்கள்.
மறுநாள் அரசவையில் தெனாலியிடம்  இது குறித்து மன்னர் விசாரணை மேற்கொண்டார், தெனாலியொ  சிறிதும் மசியவில்லை. தான் அதனை திருடவே இல்லை அவன்  மட்டுமன்றி அவன் மனைவியும் மறுத்தனர். எனவே அவர்களுடைய மகனிடம் விசாரிக்க முடிவு  செய்யப்பட்டது.

ஆனால் முந்தய நாள் இரவு தன்  மகனை உணவு உண்ண வைப்பதற்காக செய்த காரியம் அவனை மன்னரின் தண்டனையிலிருந்து தப்பிக்க உதவியது. விளையாடிய அசதியில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்ப அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான் ,மகனோ மழை பெயவ்தாக எண்ணி விழித்துக் கொண்டான். தெனாலியும் மழை பெய்வதாக சொல்லி வீட்டுக்குள் அழைத்து  வந்து உணவு கொடுத்தான்.

மன்னர் விசாரணையின் போது  நேற்று என்ன உணவு உண்டாய் என்ற கேள்விக்கு கத்தரிக்காய் உண்டதாக சொன்னான் .உடன் சுதார்த்துக் கொண்ட தெனாலி மன்னரிடம் தன மகனிடம் நேற்று மழை பெய்ததா என்று கேட்க சொன்னான் மன்னரும் கேட்டார், பலத்த மழை பெய்த்தாகக் கூறினான். மன்னருக்கு ஒரே வியப்பு இடைமறித்த  தெனாலி குழந்தைகள்  கனவில் கனடதையெல்லாம்  உண்மை என நம்புவார்கள்  எனவே அதனை சாட்சியாகக் கருத முடியாது என்று தப்பித்துக் கொண்டான்.

2 comments:

T.N.MURALIDHARAN said...

நல்ல கதை. ரசித்தேன்.சிரித்தேன்.

செங்கதிரோன் said...

மிக்க நன்றி முரளிதரன்