Tuesday, February 3, 2015

நவாப் நாற்காலி -கருப்பு பணம் பற்றிய பழைய படம்

அந்தக் காலத்தில் விமானம் மட்டுமல்ல கருப்புப் பணமும் இருந்தது என்பதனை உணர்த்தும் படம் தான் நவாப் நாற்காலி. தமிழின் ஆகச்ச்சிறந்த நடிகர்கள் அனைவரும் நடித்திருந்த படம். புகழ் பெற்ற திரைக்கதை ஆசிரியரான கோமல் சுவாமிநாதன் அவர்களுடய நாடகம் ஒன்றைத் தழுவி எடுக்கப்பட்டது.

1.தன் முதலாளி கொடுத்த கருப்புப் பணம் இரண்டு லட்சத்தினை கல்கத்தாவில் பறிகொடுத்ததால் பைத்தியமாகிவிடுவார் வி.ஸ்.ராகவன்.அவரின் மகளான லட்சுமி அந்தப் பணத்தினை திருடியவனைக் கண்டுபிடிக்க முயலும் போதும் லட்சிய இளைஞான ஜெய் சங்கருடன் காதல் வயப்பட அவரும் லட்சுமியுடன் இணைந்து அந்தப் பணம் திருடியவனை கண்டுபிடிப்பார்.

2.பத்துக் குழந்தைகளுக்கு பெற்றோரான காந்திமதி சகஸ்ரநாமம் அவர்களின் மூத்த மகன் நாகேஷ். இவர்களின் குடும்ப சொத்தான நாவாப் நாற்காலியை கில்மா பிர்ஞ்ச் படம் பார்க்க நாகேஷ் எல்லாக் கடையில் விற்று விடுவார். இந்த நாற்காலியை குழந்தை பாக்கியம் அற்ற விகே ராமசாமி வாங்கி செல்ல அதனை மீட்க சகஸ்ரநாமம் போடும் திட்டம் இரண்டாம் பகுதி.

ஜெய் சங்கர் கருப்புப் பணத்தினை பதுக்கி வைப்பதாலே இது போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றது என்று கூறி அந்தக் காலத்திலேயே கருப்புப் பணத்தின் தீமை குறித்து எடுத்துக் கூறிய படம்.

வார இறுதியில் ஒரு இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ்ந்து செலவிட ஒரு அருமையான படம். பார்த்து மகிழுங்கள்.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் பார்க்கின்றேன்

காரிகன் said...

நண்பரே,

கருப்புப்பணம் என்றே ஒரு படம் வந்தது அறுபதுகளின் இறுதியில். இதை விட அதில் வசனங்களும் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கும். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இதுதான் என்று நினைக்கத்தோன்றும் கதையமைப்பு கொண்டது. முடிந்தால் பார்க்கவும்.

செங்கதிரோன் said...

@karanthai jeyakumar: thanks for the comment. keep encouraging me.

செங்கதிரோன் said...

@kaarikan: thanks for the information. sure i will watch karupu panam movie. thanks for the comment and feedback