Monday, August 24, 2015

வன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்

சுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்பு கிடைத்தும்  தமிழ்  திரை உலகுமும் ரசிகர்களும் என்னடா இங்க நடக்குது என்று உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளாகி  இருப்பர் .அது மட்டுமன்றி  அவரின் குரு  வெங்கட் பிரபு தான் லைட்டா பொறாமை பட்டிருப்பார்.

தலைப்புக்கு வருவோம், ஏன்  வன்னியர்களை பழி  தீர்க்க இவர்கள் இருவரும் இணைய வேண்டும் ,வன்னியர்கள் இவர்களுக்கு அப்படி என்ன கொடுமை செய்தார்கள் என்று கேட்கின்றீர்களா , ஒன்றா இரண்டா பட்டியலிட்டால் பத்துப் பதிவுகள் எழுதலாம். ரஞ்சித்திடம் கேட்டால் ஒரு நாவலே எழுதுவார் அந்த அளவுக்கு வன்னியர்கள் கொடுமை செய்திருக்கின்றார்கள்.


முதலில் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு வன்னியர்களால் நிகழ்ந்த கொடூரங்களை பார்ப்போம்.பாபா படம் வெளியான சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திரையரங்கங்களில் ரகளை செய்தததோடு மட்டுமன்றி, பட பெட்டியைத் தூக்கிக் கொண்டு முந்திரி தோப்பில் கண்ணா மூச்சி என்னும் tresure hunt விளையாடி ரஜினியின் தூக்கத்தைக் கெடுத்தனர்.தமிழகத்திலேயே மிக அதிக ரசிகர் படை கொண்ட ரஜினிக்கு இதை தடுத்து நிறுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.


அடுத்து நம்ம ரூட்டு தல ரஞ்சித் அண்ணன் , வன்னியர் தலித் அதிகம் வாழும் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் இந்த வன்னியர்களால் அடையும் துன்பங்களுக்கு அளவே இல்லை. வயதான தலித் சமூகத்தினர் இந்தக் கொடுமைகளை தங்கள் விதி என்று கடந்து செல்வது போல இருக்காமல், படித்த வாலிபரான ரஞ்சித் தான்  இந்தக் கொடுமைகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்க  தனது படங்களைப் பயன்படுத்துகின்றார்.

ரஞ்சித்துக்குள் கனன்று கொண்டிருக்கும்  இந்த வன்னியர் எதிர்ப்பு நெருப்பினை ரஜினி தன்  சிகரெட்டுக்கு பத்த வைக்க பயன்படுத்த வழங்கியதுதான் இந்த கபாலி பட  வாய்ப்பு. இதனை மிக தெளிவாகவே ரஞ்சித் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.அதாவது ரஜினி மெட்ராஸ் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து மிக விரிவாக அலசியதாகக்  குறிப்பிடுகின்றார்.நம்மை போன்றவர்கள் அந்தப் படம் சுவருக்கான சண்டை தான்  என்று நினைத்துக் கொண்டிருக்க அது வன்னியர் தலித் மோதலை மட்டுமே மையப்படுத்தி எடுத்தப் படம் என்பதனை இந்தத் திவீர அலசல் செய்பவர்களால் உணர முடியும். கீழ்க்காணும் காரணங்கலிளிருந்தே மெட்ராஸ் ஒரு வன்னியர் தலித் மோதல் படம் என உணர முடியும்.


1. படத்தின் தலைப்பே உங்களுக்கு உணர்த்தி விடும், அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை என்று பெயர் மாற்றம் செய்த பின்னரும் இவர்கள் மெட்ராஸ் என்று வைத்ததற்கான காரணம் , சென்னை என்பதன் முழுப்பெயர் -சென்னப்ப நாயக்கன் பட்டினம். சென்னையில் ஆதி முதல் வாழும் வன்னியர்கள்  இன்றும் தங்களை நாயக்கர்கள் என்றே குறிப்பிடுவர். எனவே அந்த சென்னப்ப நாயக்கனே சுருங்கி சென்னை என்று மருவி விட்டதாக ஒரு வரலாறு உண்டு.எனவே தன் படத்திற்கு வன்னியர் பெயரை வைக்க விரும்பாமல் மெட்ராஸ் என்று பெயர் வைத்து தன் வன்னியர் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கின்றார்.
2. படத்தின் நாயகன் மற்றும் நாயகி வீட்டில் தென்படும் தலித் ஆதரவு புத்தகம் , அயோத்தி தாசர் புகைப்படம் போன்றவை மிக தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன , அவர்கள் தலித் சமூகம் சார்ந்தவர்கள் என்றும் அதில் தீவிரப் பற்று உடையவர்கள் என்பதும் புரியும்.மேலதிக தகவலுக்கு இந்தப் பதிவினைப் பதிவினைப் பார்க்கவும்.

3. அடுத்து வன்னியர் எதிர்ப்புக்கான அடையாளமாக அந்தப் படத்தில் கார்த்திக் சார்ந்திருக்கும் கால்பந்தாட்ட அணி நீல நிறத்திலும் , எதிரணி மஞ்சள் நிறத்திலும்  ( விசிக கட்சி-நீலம் , பாமக -மஞ்சள்) அமைத்து  மிக மிக தெளிவாகதன்  நோக்கத்தினை  அமைத்து இருக்கின்றார்.

4.கபாலி என்ற ரஜினி பட பெயரும் தலித்தின் பெயர் என ஆனந்த விகடனின் வலைபாயுதே பகுதியில் ஒருவர் எழுதி இருக்கின்றார்.எனவே ரஞ்சித் தனது வன்னியர்கள் மீதான பழிவாங்கலை ரஜினியுடன் கைகோர்த்து தொடங்கி விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இறுதியாக சில வரிகள் பாபா படத்தினை வன்னியர்கள் செய்த அராஜகத்திற்கான காரணம் ரஜினி புகைப் பிடிக்கும் பழக்கத்தினை ஊக்கப் படுத்துவது போல அந்தப் படத்தின் போஸ்டர் அமைந்திருந்ததும் , அந்த நேரத்தில் ஐநா மன்றத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் புகைப் பழக்கம் அதிகமாக இருக்க திரைப்பட நடிகர்களுக்கும் பங்குண்டு என்பது தான்.எனினும் பாமகவினர் அந்தப் பட பெட்டிகளை தூக்கிக் கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் ரசிகர்களே அதனை செய்வார்கள் அப்படி ஒரு தோல்விப் படம் அது என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். 

அண்ணன் ரஞ்சித் அவர்களின் மெட்ராஸ் படம் வேறு ஒரு இயக்குனரின் திரைக்கதையினை திருடி எடுக்கபப்ட்ட படம் என்று மிக தெளிவாக  சவுக்கு இணையத்தில் ஒரு மிகப் பெரிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நேரமிருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.வன்னியர்  தலித் பிரச்சனை குறித்து ரஞ்சித் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கின்றார்  என்பது கேள்விக்குறியே, ஏனெனில்  திரு விழா கலவரங்களை  உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தலித் சமூகத்தினர் நீண்ட நாள் கோரிக்கை சாமி ஊர்வலம் தங்கள் தெருக்கள் வழியாகவும் வரவேண்டும் எனபதே , இதனை வன்னியர்கள்  மட்டுமன்றி அங்கு இருக்கும் உயர் சாதியினரும்  எதிர்க்கின்றனர். வட  மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்வதினால்  பழி முழுக்க வன்னியர்கள் மீது தான் விழுகின்றது.மற்ற உயர் சாதியினர் இதில் இருந்து தப்பிக் கொள்கின்றனர். ரஞ்சித்தின் எதிர்ப்பு முழுக்க ஒரே சாதியினை நோக்கி இருப்பதன் மர்மம் புரியவில்லை.இருந்தாலும் ரஞ்சித்தின் இந்த எதிர்ப்பினை வன்னியர்களுக்கு எதிரானவர்கள் தங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்கின்றனர். அப்படி தான்  சூப்பர் ஸ்டாரான பரட்டையும் பத்த வச்சிட்டார். ஒருவர் ஒரு சமூகத்தை எதிர்த்தாலே பலமாக இருக்கும், இங்கு பாதிக்கப் பட்ட இருவரும் இணைந்து பழி வாங்கப் புறப்பட்டிருக்கின்றனர். எனக்கு வாழ்த்துவதா அல்லது அதனால் ஏற்படும் பின்விளைவுகளைக் கண்டு கவலைப்படுவதா என்று தெரியவில்லை.








6 comments:

pandian said...

மனபயம்
1000 ஆண்டுகள் ஆனாலும் சாதி இருக்கும்
வன்னியர்கள் இயற்கையிலே வீரம் மிக்கவர்கள். எந்த சாதியும் வன்னியர்களை எதிர்த்து நிற்காது நிலைக்காது.தலித் என்றாலே கூலிக்கு மாரடி்ப்பர்.ஒரே நிலையில் நில்லார். காகம் போல் பற...

Unknown said...

ஏன் தலித் என்று கூறுகிறீர்கள் பறையர் எனச் சொல்ல தயங்குவதன் காரணம் என்ன?......

Unknown said...

தலித் என்று சொல்வதை விட பறையர் என சொல்லலாமே .

Unknown said...

Nerupu DA.. kabali

செங்கதிரோன் said...

@Pandian:வீரத்தை மட்டும் வைத்து என்ன செய்வீர்கள்? விவேகமும் கூடவே இருக்க வேண்டும். முதலாவதாக வன்னியர்கள் எளிதாக உணர்ச்சி வசப்படுபவர்கள் என்று அறிவுசார்ந்த உலகம் நெடுங்காலமாகக் குறிப்பிடும் தவறினை சரி செய்ய முயற்சியுங்கள். இரண்டாவதாக தலித் சகோதரர்கள் மீதான காழ்ப்புனர்ச்சியினை அறவேக் கைவிட்டு கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடையக் கூடிய வழியினை நோக்கி செல்லுங்கள். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

செங்கதிரோன் said...

@Rajkumar.வன்னியர்களையும் பள்ளிபசங்க என்று தான் முற்காலத்தில் அழைப்பார்கள்,இது உங்களுக்குத் தெரியாது என்றால் பெரியவர்களிடம் கேட்டுது தெரிந்து கொள்ளுங்கள்.இரண்டு சமூகத்திற்கும் இடையிலான இந்த பிரச்சனையில் அதிகம் பலம் பெறுவது அரசியல்வாதிகள் மட்டுமே, எனவே சமூகத்தை வலுப்படுத்துவதற்கான பணியை மட்டும் செய்யுங்கள்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.