Pictures of Gourmet Food

Tuesday, December 1, 2015

ரங்கராஜ் (பாண்டே) விரித்த வலையில் வீழ்ந்த சுபவீதந்தி டிவியில் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சுபவீ அவர்கள்  ரங்கராஜை பாண்டே என்று அழைத்தலிருந்தே ரங்கராஜின் தந்திரம் வெற்றி பெற்று விட்டது. பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் ஜாதிப் பெயர் தமிழகத்தில் மட்டும் தான் இல்லை. அதை பயன்படுத்தும் ரங்கராஜ் போன்றோரை சுபவீயே பாண்டே என்று அழைக்கும் போது இது போன்று சாதிப் பெயர்களை அடைமொழியாக உபயோகப்படுத்துபவர்களை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்

திக மற்றும் திமுகவினர் ரங்கராஜ் மற்றும் சுபவீயின் கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பற்றிப் புளங்காகிதம் அடைந்து வருகின்றார்கள்.எப்படி சுபவீ ரங்கராஜை மடக்கிட்டார் பார்த்தீங்களான்னு முகபுத்தகத்தில் பெருமிதம் அடைந்து எழுதுகின்றனர்.ஆனால் அந்த நிகழ்ச்சியால் அதிகம் பலனடைந்தது ரங்கராஜ் மட்டுமே, சுபவீ ரங்கராஜுக்கு ஒரு பரந்துபட்ட அங்கீகாரமும் விளம்பரமும் கிடைக்க வழிவகை செய்து இருக்கின்றார்.ரங்கராஜின் வரலாறு என்பது  ஈழமக்களுக்குகாக உயிர்த்தியாகம் செய்த செங்கொடியின் மரணத்தினை  காதல் தோல்வி என்று தினமலரில் திரித்து எழுததியதிலிருந்தே தொடங்குகின்றது.ஆனால்  ரங்கராஜ் மங்கள் பாண்டேவுடன் தொடர்பு படுத்தி தன்  வரலாற்றினை சொல்லும்போது சுபவீ சுதாரித்து இருக்க வேண்டும். மாறாக அதனை ஆமோதித்து இன்னும் ஒரு வரலாற்று தவறினை இழைத்திருக்கின்றார்.


இந்தப் பதிவில் ரங்கராஜ் தமிழக மக்களைப் பார்த்துக் கேட்ட ஒரு  முக்கியக் கேள்விக்கு உரிய பதிலினை சொல்லிவிட்டு ,ரங்கராஜை மிக சரியாக கேள்வி கேட்கும் தகுதி படைத்த ஒரு நபர் பற்றியும் குறிப்பிடுகின்றேன்.


பார்ப்பனர்கள் எங்கேனும்  நேரடியாக வன்முறையில் இறங்கி இருக்கின்றார்களா?என்ற ஒரு அற்புதமான கேள்வியைக் கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்.சுதந்திர இந்தியாவின் முதல் குற்றவாளியே ஒரு பார்ப்பனர் தான், காந்தியைக் கொன்ற கோட்சே தான் அந்த குற்றவாளி.அடுத்து விபி சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினர் ருத்திரதாண்டவமாடியதை ஒருவரும் மறுக்க முடியாது.  அடுத்ததாக இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பினை முன்னின்று நடத்திய அத்வானி ,முரளி மனோகர் ஜோஷி போன்றோரும் பார்ப்பனர்கள் தான் என்பதனை அனைவருமே அறிவர்.இப்படி பல உதாரணங்களை அடுக்க முடியும். உண்மை இவ்வாறிருக்க பார்ப்பனர்களுக்கு வாயில் விரலை வைத்தால் கடிக்கக் கூட தெரியாது என்ற அளவுக்கு ரங்கராஜின் பிரச்சரம் எவ்வளவு பொய் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

ரங்கராஜின் முகத்திரையை கிழித்து அவருக்கு தமிழகத்தின் திராவிட ஆட்சியின் பலன்களையும் இடஒதுக்கீட்டின் அவசியம் மற்றும் தலித் மக்களின் நிலை குறித்த உண்மை நிலை குறித்து சரியாகப் புரியவைக்கும் ஆற்றல் படைத்தவர் புதிய தலைமுறையின் குணசேகரன். இவர் ஏற்கனவே சமூக கோளாறாளர் பானு கோம்ஸ் மற்றும் பாஜகவின் பிரச்சார பீரங்கி கே .டி.ராகவன் ஆகியோரின் பொய் பிரச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்ததோடு மட்டுமன்றி அவர்களை நோக்கி மிக சரியானக் கேள்விகளை எழுப்பி திணறடித்தவர். 

குணசேகரன்

ரங்கராஜுக்கு துணிச்சல் இருப்பின் குணசேகரன் அவர்களுடன் இது போன்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்கட்டும்.


பின் குறிப்பு :அனைத்துப் பதிவர்களும் நண்பர்களும் இனி ரங்கராஜ் என்றே குறிப்பிடுங்கள். பாண்டேவை மறந்து விடுங்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

2 comments:

தமிழானவன் said...

சரியாகச் சொன்னீர்கள்.

bujji said...

guna is great