Sunday, April 17, 2016

இளம் எழுத்தளர்களின் சண்டைகள் : அபிலாஷ் -பிரபு காளிதாஸ் -வா மணிகண்டன்



இலக்கியத்துறையில் சண்டை சாதரணமான ஒன்றாக இருந்தாலும் முதல் புத்தகம் எழுதியக் கையோடு சண்டைக்கு புறப்பட்டு விட்டார் பிரபு காளிதாஸ் , தனது  மிக குறைந்த ஒளியில் புத்தக வெளியீட்டின்  அன்றே பஞ்சாயத்தத் தொடங்கி விட்டார்.பிரபுவின் புத்தக புரமோஷன் யுத்தியைக் கிண்டலடித்து எழுதியதோடு மட்டுமன்றி அடுத்து பிரபு அவர்கள் ரோலக்ஸ் வாட்ச் என்ற நூல் குறித்து மிகவும் சிலாகித்து எழுதிய விமர்சனத்தினை கடுமையாகத் தாக்கி அபிலாஷ் எழுத அதற்கு பிறப்பு அவர்களின் கடுமையான எதிர்வினையாற்ற நமக்கு முழுக்க ஒரே என்டேர்டீன்மென்ட்.தேர்தல் குறித்த காமெடிகள் கொஞ்சம் தனிந்த நிலையில் இவர்களின் நீயா நானா என்ற அக்கப்போர் தாங்க முடியவில்லை.











அடுத்து நிசப்தம் அறக்கட்டளையின் மணிகண்டன் , இவருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் இருக்கும் வாய்க்கத்தகராறு அனைவரும் அறிந்த ஒன்று தான். பாம்புகளுக்கு பால் வார்ப்பத்தில் மனுஷ் தமிழகத்தில் முதலாமனவர்.
 மணிகண்டனுக்கு உயிர்மையில் எழுத வாய்ப்பு வழங்கினார்.  அவ்வாறு வாய்ப்பு வழங்கி வளர்க்கப்பட்ட ஒருவர்தான் வா மணிகண்டன் , பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் தி .மு.க வில் கணக்கு கேட்டு வெளியே சென்றது போல இவரும் ராயல்டி பிரச்சனையில் வெளியே சென்று மனுஷின் தொலைகாட்சி விவாதங்கள் குறித்து தாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தவர் . அதன் அடுத்தகட்ட நகர்வாக மனுஷுக்கு தி.மு.கே.வில் சீட்டு கிடைக்கவில்லை என்று நக்கலடித்துப் பதிவு போட அதற்கு நானும் ரவுடிதான் என்று வாலண்டியராக அபிலாஷ் அவர்கள் மனிகண்டனைத் தாக்கிப் பத்தி போட இந்த வாரம் இலக்கிய உலகில் அபிலாஷ் வாரமாகி விட்டது.


அரசியல்ல தான் சண்டை உச்சமாக இருக்கிறதே என்று இலக்கியத்திற்குள் நுழைந்தால் அது அதற்கு மேல் இருக்கின்றது.

எனவே வழக்கம் போல நாம் சாப்பாட்டின் பக்கம் கவனம் செலுத்தி உடலை வளர்ப்போம் .
சோத்துக் கட்சி வாழ்க.

நன்றி
செங்கதிரோன் 

2 comments:

KAYALVIZHI said...

இவனுக்கு நாந்தான் பெரிய அறிவாளின்னு நெனப்பு.கர்வி.மத்தவங்கள மட்டந் தட்ட்றதே வேல.தற்பெருமையோட மொத்த வுருவம்

செங்கதிரோன் said...

யாரை சொல்றீங்க ?