Monday, August 1, 2016

அச்சம் தவிர் நிகழ்ச்சியில் நடக்கும் அத்துமீறல்கள்


நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு வானளாவிய அதிகாரம் கொடுப்பது பல சமயங்களில் அந்த நிகழ்ச்சி மிக சிறப்பான ஒன்றாக அமையும் .அதே நேரத்தில் இந்த அதிகாரத்தினை தவறாகப் பயன்படுத்தும் போக்கினால் கனப்போரை முகம் சுளிக்க செய்வதாக மாறிவிடுவதும் உண்டு.காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் உள்ளூர் தமிழர் முதல் உலகத்தமிழர் வரை அனைவருக்கும் பிடித்தமானவராக மாறியவர் திவ்யதர்ஷினி.

அந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குப் பின் அச்சம் தவிர் என்ற ஒரு நிகச்சியினை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழில் ஒரு புதிய மற்றும் அரிய  முயற்சி என்றே சொல்லலாம் அந்தளவுக்கு ஆக்ஷ்ன் ,திரில் கலந்த நிகழ்ச்சி. தொலைக்காட்சி பிரபலங்கள் , சினிமா பிரபலங்கள் உள்ளடக்கிய  இரண்டு அணியாகப் பிரிந்து விளையாடும் விளையாட்டில் நடக்கும் போட்டியில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன்பு இந்நிகழ்ச்சி குறித்த முன்னோட்ட காணொளியைக் காணுங்கள்.


1.ஆண் பெண் இருவர் சேர்ந்து இருக்கும் நிகழ்ச்சி என்றாலே கிசுகிசுக்கு பஞ்சம் இருக்காது. அதே போல தான் இங்கும் , இருவரும்  சேர்ந்து செய்யும் விளையாட்டுகளில் நடக்கும் ஓட்டல் ,உரசல் பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.இது குறித்து முன்பே ரசனை ஸ்ரீராம் அவர்கள் அச்சம் தவிர் வெட்கம் தவிர என்ற பெயரில் ஒரு பதிவினை எழுதி இருக்கின்றார்.அடுத்து பீப் ஷோ நிகழ்ச்சியிலும் அச்சம் தவிரைக் கலாய்த்து ஒரு காணொளி வெளியிட்டனர் ,அதனையும் கண்டுகளையுங்கள்.


2.இது தான் மிக முக்கிய பகுதி , பிரபலமானவுடன் தலையில் கொம்பு முளைத்து ஆணவத்தில் ஆடுவார்கள் ,அதே தான் இங்கும், தனக்குப் பிடித்தமானவர்களிடம் அவர்களின் தவறினை கண்டுகொள்ளாமல் இருப்பதும் , சின்ன நடிகர்கர்களிடம் (அதிக பிரபலமில்லாத ) அடாவடியாக ஹிட்லர் போல  நடந்து கொள்ளும் போக்கு நிகழ்ச்சியினைப் பார்ப்பவர்களுக்கு ,டிடியின் மேல் இருக்கும் அபிமானமும் மரியாதையினையும் குறைக்கின்றது.முன்பே காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தினேஷை இதே போன்று தான் ஒரு அலட்சியப்போக்குடன் நடத்தினார்.

அவ்வாறு தினேஷ் போன்றே இங்கு அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நபர் நாடோடிகள் பரணி. இயல்பிலேயே மிக எளிதில் உணர்ச்சிவயபப்டும் மனிதரான பரணியை சீண்டி விட்டு வம்புக்கு இழுப்பது , மற்ற்வர்களுக்கு காட்டும் சலுகையினை இவர்க்கு கண்ணபிக்காமல் அவமானப்படுத்துவது என்று தொடர்ந்து தனது அத்து மீறலினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார். நிகழ்சியில் இவருடன் பங்கேற்கும் மற்றவர்கள் டிடியைப் பகைத்துக் கொள்ள விரும்பாததால் இந்த அநீதிகள் குறித்து வாய் திறக்காமல் கள்ள மௌனம் காக்கின்றனர்.


மிகப் பெரிய நடிகைகள் தொகுத்து வழங்கியபோது கூட இது போன்ற அத்து மீறல்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மீது நடக்கவில்லை.ஆனால் குறுகிய காலத்தில் புகழ் பெற்ற டிடிக்கு விஜய் தொலைக்காட்சியின் நிர்வாகம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரம் தான் இது போன்று அத்து மீறல்களை செய்ய வைக்கின்றது. இந்த பூனைக்கு கூடிய சீக்கிரம் யாரவது மணி கட்டுவது நல்லது.

பல குறைகள் சொன்னாலும் தமிழில் மிக அறிய முயற்சி என்பதனால் நான் தொடர்ந்து பார்ப்பேன் , நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

நன்றி
செங்கதிரோன் 

No comments: