Friday, May 8, 2020

காபி வித் பாரதமாதா: சிறுகதை


டேய் கந்தா வாடா வெளியில வெள்ளாடலாம் , 
கேட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த என் நண்பர்கள் என்னை அழைத்தனர் .

கேட் பூட்டப்பட்டு இருந்தது , வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். வெளியில் போக வேண்டுமென்றால் அம்மா அனுமதி கொடுத்தால் மட்டுமே போக முடியும்.
உள்ள போயிட்டு , அம்மாகிட்ட கேக்கலாம்னு போனேன் . , அம்மா தூங்கிட்டிருந்தாங்க , தலைகாணி அடியில தான் கேட் சாவி இருந்துச்சு , எடுக்க முடியும் , ஆனா எடுத்தது தெரிஞ்சா , தோலை உரிச்சுருவாங்க .

மெதுவா அம்மா கிட்ட கேட்டேன் அம்மா பசங்க வெள்ளாட கூப்பிடறாங்க, நா போவட்டுமா
ம்ம் ..பேசாம தூங்கு இல்லனா , புக் எடுத்துப் படி , சாயந்தரமா வெள்ளாட அனுப்புறேன்னு கண்ணை கூட திறக்காம சொல்லிட்டு தூங்கிட்டாங்க.
அம்மாவுக்கு சனி ஞாயிறு சாப்பிட்டு தூங்கணும் , வேலைக்குப் போறதுனால இந்த ரெண்டு நாள் முழுக்க ரெஸ்ட் எடுக்கணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பேங்க , வேலைக்குப் போகாம வீட்ல இருக்குற பொம்பளங்களாம் தினமும் தூங்கிறாங்க, வேலைக்குப் போற நம்மளால இந்த ரெண்டு நாள் தான் தூங்க முடியும், அதனால அதை எந்தக் காரணம் கொண்டும் விட்டுடடக் கூடாதுன்னு அம்மாவுக்கு எண்ணம்.
ஆனா எனக்கு மட்டும் மதியானத்துல எப்பவுமே தூக்கமே வராது .அம்மா வெளியில போகக்கூடாதுன்னு சொன்னதால மாடிக்குப் போய் அங்கிருந்து பசங்க வெள்ளாட்றத வேடிக்கைப் பார்த்திட்டிருந்தேன்.
அப்படியே காலம் உருண்டோடியது,கந்தனுக்கு கல்யாணமும் ஆச்சு ,மனைவியுடன் வெளிநாட்டில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பொது அந்த வாழ்க்கையில் ஒரு நாள் ,,,,
சனிக்கிழமை மதியானம் , மனைவி சமையலை தயார் செய்த பின்னர் , சாப்பாட்டுக்கு தொட்டுக்க கந்தன் ஆறு முட்டைகளை உடைத்துப் போட்டு பொடிமாஸ் செய்தான். ரெண்டு பேரும் சாப்பிட்டு முடித்தனர் . 

கொஞ்ச நேரம் சோபாவில் அமர்ந்திருந்தனர் . பின்னர் அவன் மனைவி பச்சையம்மா , நான் இப்ப என்ன பண்ண போறேன் சொல்லுங்க என்று கேட்டாள்.
கந்தன் அப்பாவியாக கேட்டான் , படம் ஏதாவது பாக்க போறியா , இல்ல இல்ல நான் தூங்க போறேன், நீங்க வேணா படம் பாருங்க , அப்படியே இங்கேயே உங்க மடியில படுத்து தூங்கிடறேன், தலையை மட்டுமே தடவி கொடுங்க கொஞ்ச நேரத்துல தூங்கிடுவேன்.
அடியேய் அதெல்லாம் முடியவே முடியாது , வா வெளியில கடைக்குப் போயிட்டு வரலாம், மதியானத்துல என்னால வீட்டுக்குள்ள உக்காந்த்திருக்க முடியாது. பச்சையம்மா கந்தனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்து விட்டு எந்த கடைக்கு போகணும் என்று கேட்டாள் . உனக்கு டிரஸ் வாங்கலாம், அப்படியே இந்தியன் கிராசரி ஸ்டாருக்குப் போய் ஆட்டா , புரு காபிலாம் வாங்கிட்டு வந்துருவோம் என்றான் கந்தன். மதியானத்துல நீங்கலாம் எப்படி தான் தூங்கறிங்களோ , எனக்கு மதியானத்துல தூங்கினா எனக்கு நைட் தூக்கம் வராதுடி என்றான் கந்தன்.
ஆமா நைட்ல மொபைலல்ல பேஸ்புக் பார்த்துட்டு தூங்கவே மாட்டிங்க , டெய்லி உங்ககிட்ட போனை வச்சிட்டு தூங்குங்கன்னு சொல்லிட்டே இருக்கணும்.
உங்க வீட்ல யாருமே மதியானத்துல தூங்க மாட்டீங்களா , எங்க வீட்ல எல்லாருமே மத்தியானம் சாப்பிட்டு நல்லா தூங்கிடுவோம். எங்கம்மா டீ போட்டு வச்சுட்டு எங்களை எழுப்புவாங்க என்றாள் பச்சையம்மா .
சனி ,ஞாயிறுல மதியானத்துல தூங்க கூட விட மாட்றீங்களே என்று சொல்லிக் கொண்டே கடைப் போக தயாரானாள் பச்சையம்மா.
எங்க வீட்ல அம்மாவும் அக்காவும் தான் மதியானம் தூங்குவாங்க , எங்கப்பா சன்னாயிரு வீட்லே இருக்க மாட்டாரு ,யூனியன் ஆபிசுக்கு போயிடுவாரு ,நான் மட்டும் தூங்காம மாடியில நின்னுக்கிட்டு பசங்க வெள்ளாட்றத பார்த்துட்டு இருப்பேன் என்றான் கந்தன்.
போகும்போதேபச்சையம்மா ஒரு கன்டிஷன் போட்டாள் கடைக்குபோயிட்டு ஒரு மண்ணேரத்துல திரும்பி வர்றோம் , நான் கொஞ்ச நேரமாவது தூங்கணும் என்றாள். ஒப்புக்கு ஓகே ஓகே என்று சொன்னான் .
கடையில் தேவையானவற்றை வாங்கிவிட்டு காரை எடுக்கும்போது ஏங்க நான் eybrows பண்ணனும் ஏதாவது beautciacn கடை இங்க இருக்கான்னு பாருங்க என்றாள் . தூங்க இருந்தவளை வலுக்கட்டாயமாக இழுத்துவந்ததால் சுத்திமுத்தி பார்த்து ஒரு கடையைக் கண்டுபிடித்தான் .
பாஞ்சு நிமிஷம் தான் ஆகும் , எதுத்தாப்ல இருக்கற மெக்டில உக்காந்திருங்க நான் வந்துற்றேன் என்று சொல்லவிட்டு கிளம்பி விட்டாள் .
மெக்டிக்குள் நுழைந்தால் அதிக கூட்டமுன்னும் சொல்ல முடியாது , கூட்டம் இல்லன்னும் சொல்ல முடியாது.ஆங்காங்கே ஆட்கள் உட்கார்ந்திருந்தனர். மெக்டில பர்கர் கிடைப்பதோடல்லாமல் ஐஸ்க்ரீம் , காபி ஆகியவையும் இருக்கும்.
வெளிநாட்டு காபி கடைகளில் பலவகையான காபிகள் , வெவ்வாறான அளவுகளில் கிடைக்கும். டீ ஷர்ட் சைஸ் போல small ,medium ,large ,extra large என்ற அளவுகளில் கிடைக்கும் . இங்கே சமத்துவம் எப்படி நிலவுகிறது என்பதற்கு காபி கடைகளை கூட உதாரணமாக சொல்லலாம் . ஒரு கம்பெனியின் முதலாளி முதல் கடைநிலை ஊழியன் வரை இங்கிருக்கும் அனைத்துக் காபி கடைகளுக்கு சென்று காபி குடிக்கும் அளவுக்கு அதன் விலை இருக்கும். நம்மூரில் சரவணபவனில்காபி சாப்பிட கூட நடுத்தர வர்க்கமே நாலு முறை யோசிக்கும் அளவுக்கு அதன் விலை இருக்கும்.
வழக்கமாக நான் வாங்கும் Large காபியினை வாங்கி விட்டு, காபி வாங்க லைனில் நிற்கும் போது எங்கே உட்காரலாம் என்று திட்டம் போட்டனோ அந்த இடத்தில் போய் உட்கார்ந்துவிட்டேன். இன்னும் பதினைந்து நிமிடத்தில் மனைவி வந்து விடுவாள் என்பதால் சும்மா பேஸ்புக் பார்க்கலாம் என்று மொபைலை எடுத்தேன் . போனை எடுத்தவுடன் மனைவிடமிருந்து அழைப்பு , அதுக்குள்ளவே முடிஞ்சிருச்சா என்று நினைத்துக் கொண்டே , என்னமா என்றேன் ?
ஏங்க இந்தக்கடையில nails கூட பண்ணுவாங்கலாம் , விலை ரொம்ப கம்மியாருக்கு அப்புறம் ஏகப்பட்ட options இருக்கு நான் பண்ணிக்கட்டுமா என்றாள் . இதுல என்ன இருக்கு பண்ணிக்கோ ஆனா எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டியா என்றான் கந்தன்.
ம்ம்ம் .அரமண்ணேரத்துலருந்து முக்காமண்ணேரம் வரைக்கும் ஆகும் என்றாள் பச்சையம்மா. 

நான் என்ன பண்றது அவ்ளோ நேரம்? என்றான் கந்தன் 
,மெக்டிலே இருங்க , இல்லனா சும்மா வேற ஏதாவது கடைக்குப்போய்ட்டு வாங்க என்றாள். 

சரிடி எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டு கால் பண்ணு என்றான் கந்தன்.
போனை கையிலே வச்சிருங்க நான் வாட்ஸாப்பில நேயில்ஸ் போட்டா அனுப்புறேன் நீங்க எது நல்லா இருக்குன்னு செலக்ட் பண்ணி சொல்லுங்க என்றாள் .
ஓகே கண்டிப்பா சொல்றேன் , ஆனா சீக்கிரம் முடிச்சுட்டு வா என்றான் கந்தன்.
இன்னும் குறைந்தது அரை மணிநேரம் இருப்பதால் youtube பார்க்கலாமா அல்லது பேஸ்புக்கே பார்த்துட்டு இருக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான் .

அப்போது ஒரு வெள்ளைக்காரப் பெண் அருகே வந்து இங்கே உட்காரலாமா என்று கேட்டாள் . okay no problem. என்றான் கந்தன் .
பரஸ்பர அறிமுகம் நடந்த பிறகும் , கந்தனுக்கு எதற்காக இந்தப்பெண் இங்கே உட்கார்ந்தாள் என்ற கேட்கப்போகின்றாள் என்று யோசித்துக்கொண்டிருந்தான். 

அவள் பெயர் மிச்சல் என்றும் பெல்ஜிய நாட்டிலிருந்து தன தாத்தா இடம் பெயர்ந்தார் என்றும் . கல்லூரியில் வணிகவியல் படித்து வருவதாகவும் குறிப்பிட்டாள் .நானும் உங்களைப் போலவே இந்த நாட்டுக்கு வந்தேறி தான் , நாங்கள் இரண்டு தலைமுறையாக வாசிக்கின்றோம் , நீங்க புதுசாக வந்த வந்தேறி என்றாள் . அது மட்டுமல்லாமல் தன் ஆன் நண்பர் ஒரு கனடிய பூர்வீக குடி இனத்தை சேர்ந்தவன் என்று பெருமையுடன் கூறினாள் .
21 வயதே நிரம்ய அவள் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்த்திருப்பதாக குறிப்பிட்டாள். அந்தப் பயணங்கள் குறித்தும் , அனுபவங்கள் குறித்தும் சொன்னாள் . மேலும் இந்தியா தனக்கு மிகவும் பிடித்தமான நாடு , ஆனால் அங்கு மட்டும் இன்னும் செல்லவில்லை என்று கவலையுடன் குறிப்பிட்டாள் .
தாஜ்மகால் குறித்து நிறைய பேசினாள் . நான் இரண்டுமுறை தாஜ்மகால் சென்றிருந்தும் அறிந்திராத பல விஷயங்களை குறித்து சொன்னாள் . அவள் பேசியதைக்கேட்டு மறுபடியும் தாஜ்மகாலினை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
இருப்பினும் நான் நம்மூர் பெருமைகளைப் பேச வேண்டும் என்பதற்காக தஞ்சை பெரிய கோவில், மகாபலிபுரம் போன்றவற்றின் சிறப்புகளை எடுத்துக் கூறி தாஜ்மாகாலைப்பார்த்து விட்டு அபப்டியே இந்தியாவின் தெற்குப்பகுதிக்கு செல்லுங்கள் , அதி அற்புதமான கட்டிடங்கள் இருக்கின்றன என்றேன் .
மிச்செல் :well ………...என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு sorry to say this இந்தியா செல்லவே எனக்கு பயமாக இருக்கின்றது . உலகில் மற்ற எந்த நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றாலும் கனடாவில் இருக்கும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும் அதே மனநிலையுடன் தான் பயணிப்பேன் .
இந்தியாவிற்கு பயணம் செய்வது குறித்து குடும்பத்தருடன் பேசினாலோ நணப்ர்களுடன் பேசினாலோ வேண்டவே வேண்டாம் என்கின்றனர். எனக்கு இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே ஏற்பட்டது . அமம்விடம் கேட்டபோது நீ வளர்ந்து பெரியவளான பிறகு செல்லலாம் என்று சொன்னாள் . 
இபொழுது கேட்டாள் என்னை மாதிரி வயதான பெண்களுக்கே இந்தியாவில் பாதுகாப்பு இல்லை, இதில் உன்னை எப்படி அழைத்து செல்வது என்று என் அம்மா கூறினாள்.
மிச்செல் இவ்வாறு கூறியதற்கு என்ன விதமான பதில் கூறுவது என்று தெரியவில்லை .இந்தியாவின் ஒட்டு மொத்த ஆண்களைக் குறித்து வெளிநாட்டு பெண்களுக்கு இருக்கும் மதிப்பீடு அதிர்ச்சியாக தான் இருந்தது . 
அது ஒரு முழுமையான உண்மை இல்லை என்றாலும் அந்தக் கருத்தினை மாற்றிக்கொள்ள சொல்வதற்கு போதுமான உதாரணங்களும் நம்மிடம் இல்லை என்பது தான் நிதர்சனம் .
டொரோண்டோ விமானநிலையத்தில் இருந்து கிளம்பி நேராக தாஜ்மஹால் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கே ஒரு நாள் முழுக்க அந்த அழகினை ரசித்து விட்டு எந்த ஒரு ஆபத்திலும் சிக்காமல் மீண்டும் டொரொன்டோ வந்து சேருவதற்கு உங்களால் எதாவது ஒரு திட்டம் வகுத்து கொடுக்க முடியமா என்று மிச்செல் கேட்டாள்.

பதில் சொல்ல ஆரம்பிப்பதற்குள் என் செல்போனுக்கு அழைப்பு வந்தது , excuse me என்று சொல்லிவிட்டு , போனை எடுத்துப் பேசினேன் ,
உங்ககிட்ட என்ன சொன்னேன் , கையிலேயே போனை வச்சிருங்க நெய்யில்ஸ் போட்டோ வாட்ஸாப்பிலே அனுப்புறேன் , பார்த்துட்டு சொல்லுங்கன்னு தான சொன்னனேன், நான் பக்கத்துல இருக்குபோது போனையே பார்த்துட்டு இருக்க வேண்டியது , இல்லாதது போது என்ன பண்றீங்கன்னு தெரியலே , சீக்கிரமா எதுன்னு செலக்ட் பண்ணி அனுப்புங்க என்று என்னைப் பேசவே விடாமல் அவளே பேசிவிட்டு போனை வைத்து விட்டாள் .
just give me a second என்று மிச்சலிடம் சொல்லிவிட்டு வாட்ஸாப்பில் மனைவி அனுப்பிய போட்டாக்களை பார்த்தான் , அப்படியே தலை சுற்றியது , ஏகப்பட்ட கலர் மற்றும் விதவிதமான அமைப்புகளை உடைய நெயில்ஸ்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் 
இதிலிருந்து ஒரு கலர் அதற்கு ஏற்ற ஒரு அழகான வடிவம் என எப்படி தேர்ந்தெடுப்பது என்று யோசிக்கையில் , மிச்ச்ளின் கை விரலில் வித்தியாசமான கலருடனான நெயில் இருந்தது. எனவே அவளிடமே இந்த பட்டியலிலிருந்து ஒன்றினை தேர்ந்தெடுக்க சொல்லி கேட்கலாம் என்று தோன்றியது.
if you dont mind can I ask you one thing என்றேன் of course என்றாள் , என் மனைவி அனுப்பிய போட்டோக்களை கணப்பித்து இதில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுக்க உதவி செய்யமுடியுமா என்று கேட்டேன். ஒகே என்று சொல்லி சிறிது நேரத்தில் செலக்ட் செய்து கொடுத்தாள் . மனைவிக்கு மிச்செல் செலக்ட் அனுப்பி விட்டேன் .
உங்கள் மனைவியிடம் நீங்கள் பேசும் முறை, அவளுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ளு அக்கறை என அனைத்தும் ஆச்சரியமாக இருக்கின்றது என்றாள் மிச்செல். நான் இந்தியப்பெண்களை ஆண்கள் மிகெபெரிய அளவில் அடிமைப்படுத்தி வைத்திருப்பார்கள் என்றே எண்ணி இருந்தேன் .இந்தியா முழுமயாக மாறிவிட்டதா எல்லா ஆண்களுமே இப்படித்தானா என்று கேட்டாள் , நிலைமை முழுதும் மாறிவிட்டதாக சொல்ல முடியாவிட்டாலும் ஆண் பெண் சமத்துவம் குறித்த விழிப்புரவு அதிமாகிறது என்றேன்.
டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தினைக் குறிப்பிட்டு அதனால் தான் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறினாள். நான் இந்தியா சென்றால் அதே போன்று கற்பழித்து கொன்று விடுவார்களா என்னு சொல்லி தன கழுத்தில் இரண்டு கைகளையும் வைத்து நெறிப்பது போல செய்து கண்ணபித்து இது போல நடக்குமா என்று மறுபடியும் கேட்டாள்.
ஒரு நிமிடம் அப்படியே உறைந்து பொய் விட்டேன் . என்ன விதமாக பதில் சொல்வது , இந்த பயத்தினை யாரால் போக்க முடியும் என்று யோசித்தேன். பாரத மாதாவினை குறிப்பிட்டு நாங்கள் பெண்களை தெய்வமாக மதிப்பவர்கள் என்று சொல்லி பயத்தினைப் போக்கலாமா என்று நினைத்தேன். நான் சொல்லும் பதிலைக் கேட்டு அவள் சிரித்து விட்டால் என்ன செய்வது என்றெண்ணி அதை சொல்லவில்லை.

நன்றி 
செங்கதிரோன்

No comments: