Tuesday, April 21, 2015

தமிழகத்தின் அடுத்த சோ.ராமசாமி இவர்தான்

தமிழக அரசியல் சூழலை மிக சரியாக விமர்சிப்பதோடு மட்டுமன்றி அரசியல் தலைவர்களுடனும் நல்ல நட்புறவுடன் திகழ்ந்து வருபவர் சோ , கடந்த பதினைந்து வருடங்களாக தன்னை தீவிர இந்துத்துவ பார்ப்பன அரசியலில் சுருக்கிக் கொண்டதால் இவரின் கருத்துகளுக்கு அவர் சாதி சார்ந்த மக்கள் மற்றும் இதர உயர் சாதிகள் மட்டுமே ஆதரிக்கும் நிலை உண்டாகியது. அரசியல் சூழலில் தீவிர ஜெ  ஆதரவுப் போக்கினால் பத்திரிக்கைகளும் இவரை தற்போது கண்டு கொள்வதில்லை. அதுவும் மிடாஸ்  சாராய ஆலைக்கு சில காலம் மேலாளாராக இருந்தை அவர்  சமூகம் சார்ந்த மக்கள் கூட  அருவருப்புடன் பார்க்கின்றனர்.

எனவே அவ்வெற்றிடத்தினை நிரப்ப தகுதியான ஆள் அதே சமூகத்தில் இருந்து உருவாக வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டுள்ளது .சிலவருடங்களுக்கு முன்னர் எஸ் வி சேகர் அவர்கள் தான் பிற்காலத்தில் சோ போல அரசியல் விமர்சகர் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.சோவைப் போல சினிமா பின்புலம் இருந்தாலும் நாரதர் கலகம் மற்றும் தரகு வேலை செய்தல் போன்ற சோவின் குணாதிசியங்கள் இல்லாததால் எந்த ஆட்சி வருகின்றதோ அந்த ஆட்சிக்கு அடிமையாக இருப்பதையே தொழிலாக மாற்றிக் கொண்டார்.

ஆனால் எந்தப் பின்புலமும் இல்லாமல் வெளிநாட்டில் முனைவர் பட்டம் பெற்று இங்கே பதிப்பகம்  தொடங்கி பின்னர் அரசியல் விமர்சகராக மாறி வலம் வரும் பத்ரி தான் அடுத்த சோ என அவரின் நண்பர்கள் அடிப்பொடிகள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு  பல்கலைக் கழகத்தில் இருந்து களம் இறங்கியிருக்கிறார் ஸ்ரீதர் சுப்ரமணியம்.


நீயா நானாவில் கலந்து கொண்டு எந்த விதமான அலங்காரத் தொனியும் இல்லாமல் வெறும் தலைப்புக்கு தொடர்பான கருத்துக்களை மட்டும் கூறுவதனால் இவரை கோபிநாத்துக்கு மிகவும் பிடிக்கும். வெகு சீக்கிரமாக தமிழர்கள் அனைவருக்கும் பிடிக்கும் காலம் வரும். இலங்கை தொடர்பான  இவரின் கருத்துகள்  எல்லா உயர் சாதியினரின்  கருத்தைப் பிரதிபலிப்பதாகவே இருந்தாலும் நம் சம காலத்து சிறந்த கதை சொல்லி ஷோபா சக்தியை மன்னிப்பது போல இவரையும் மன்னித்து விடலாம் அல்லது கால சூழலில் ஈழ மக்களின் நியாய உணர்வினை ஐவரும் புரிந்து கொள்ளும் சூழலும் ஏற்படலாம் . 

தனுஷ்  எப்படி வெகு சாதரணமாக அறிமுகமாகி இன்று நம்பிக்கை தரும் நட்சத்திரமாக  திகழ்கின்றாரோ அதே போல ஸ்ரீதரும் திகழ்வார் என்பதற்கான காரணங்கள் பல ,முன்பே கூறியது போல கருத்துகளை மிக தெளிவாக எடுத்துரைத்தல் , நன்கு  கற்றறிந்தவர், சோவைப் போலவே அனைவருடனும் இணக்கமாக பழகும் இயல்பு கொண்டவர் என்று எண்ணுகிறேன் . இது மிகவும் முன்கூட்டியே எடுக்கப்பட்ட அனுமானமாக இருந்தாலும் இது உண்மையாக மாறுவதற்கான  வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே எண்ணுகின்றேன. 


இப்பதிவு ஸ்ரீதர்  அவர்களின் புகழ் பாடுவதற்காக அல்ல , மாறாக சோவாக தன்னால் மட்டுமே மாற முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பத்ரி சேஷாத்ரிக்கு அதற்கான வாய்ப்பே இல்லை என்று எடுத்துரைக்கவே இந்தப் பதிவு.பத்ரிக்கு  ஏன்  அந்தத் தகுதி இல்லை. பதிர்யின் மூர்க்கத் தனம், தான் மிக்கப் படித்தவன் என்ற அகங்காரம். திருவள்ளுவர்  மற்றும் ஒவையார்  வழி வந்த தமிழ் பரம்பரைக்கு இது இரண்டுமே ஒவ்வாமையை உண்டாக்கக் கூடியவை. அதுவும்  கால மாற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளாமல்   தீவிர இந்துத்துவ ஆதரவு ,சாதி வெறி இரண்டும்  இரண்டு கண் போல இயங்கும் பத்ரியை    தமிழ்  பத்திரிகை உலகம் சகித்துக் கொள்ளாது. அப்புறம் சோ ராமசாமியின் இறுதிக் காலம் போலவே வெறும் 500 பிரதி விற்பனையாகும் பத்திரிக்கை ஆரம்பித்து  அதிலேயே தலையங்கம் முதல் அனைத்ததையும் எழுதி பொழுதக் கழிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.
நன்றி 
செங்கதிரோன் 

2 comments:

taruada said...

All I can see is your obsessed hate on Hindus community. I think we can write like this only in India

Taru

செங்கதிரோன் said...

@Taruda : I haven't mentioned anything against hindu community. Don't put the blame blindly.