Saturday, June 25, 2016

விஜயகாந்த் வழியில் விஷால்:

தென் மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்துக்கு அங்கே செலவாக்கு இல்லை எனவே வட மாவட்ட இளைஞர்களை தன் வசப்பபடுத்திக் கொண்டார். அதே போல தன் சொந்த மாநிலமான தெலுங்கு சினிமா விஷாலை  உள்ளெ வர தடுத்ததினால் தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்தார். ஆனாலும் இங்கு எந்த விதமான பிடிப்பும் கிடைக்கவில்லை . இப்படியே சென்றால் தன்னுடைய அண்னன்(விக்ரம் கிருஷ்ணா) மாதிரி தானும் சீக்கிரமே சினிமாவிலிருந்து காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சினார். மூன்றே படத்தில் தன்னுடைய மார்க்கெட்டை விஜய் மற்றும் அஜித்துக்கு அடுத்த நிலைக்கு எடுத்து சென்று விட்டார் சிவ கார்த்திகேயன். இதனால் விஜயகாந்த் எப்படி வட மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ள  வன்னியர்களை வளைத்து மிகப் பெரும் வெற்றி அடைந்தாரோ அதே வழியில் செல்ல நினைத்தார். இது போன்ற ஒரு சூழலில் தான் விஷாலுக்கு தெற்குப் பகுதியில் வாழும் தேவர் இன இளைஞர்களைக் குறிவைத்துப் படம் எடுத்தால் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கனக்குப் போட்டார். வேறு யாரேனும் கூட இந்த யோசனையை வழங்கி இருக்கக் கூடும். 


முதன் முதலாக சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு என்று மதுரையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து சோதனை முயற்சி செய்தார்.மதுரைக்காரன்டா என்ற வசனத்தை சொன்னதன் மூலம் மந்திரித்து விட்ட கோழியாக மதுரைக்காரர்கள் இவரின் ரசிகராக மாறினர். அதற்கடுத்து சாதிப் பெருமையை பேசும் படங்களை எடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த முத்தையாவின் இயக்கத்தில் மருது படம் நடித்து முழு நேர தேவர் அரிதாரம் பூசிக் கொண்டுள்ளார்.

கார்த்தி மற்றும் பிரபு இருவரும் தேவரினத்தை குஷிப்படுத்தும் வகையிலானப் பல படங்களை எடுத்து அவர்களை தங்கள் வசபப்டுத்தி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது அது போன்று யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தேவர் இளைஞர்களுக்கு விஷால் தான் இப்போது ஆறுதலாக இருக்கின்றார். பிரபு மற்றும் கார்த்தியின் வாரிசுகள் வளரும் வரை விஷாலுக்கு தென் மாவட்டத்தில் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.


திரையில் மட்டுமல்ல போது வெளியிலும் விஜயகாந்த் வழியினைப் பின்பற்றி பொதுத் தொண்டு செய்வது , ரசிகர் மன்றங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவது என அண்ணன் விஜயகாந்த் வழியில் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றார். அது மட்டுமன்றி தமிழரல்லாதோர் பொறுப்புக்கு வருவதற்கு துவாக உள்ள அமைப்பான தென்னிந்திய திரைப்பட சங்கத்திலும் செயலாளராகி விட்டார். தெலுங்கு நடிகையான ரோகிணி பூவுலகு அமைப்பின் மூலம் விவசாயிகள் சங்கத்திற்கும் விஷாலை அழைத்து சென்று கவுரப்பப்டுத்தி  இருக்கின்றார்.


அடுத்து விஜகாந்த் வழியில் அரசியலை நோக்கி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணுகின்றேன். 

சாதிவெறியும் சினிமா வெறியும் தமிழனின் கண்ணை மறைத்தால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற நிலை மாறி வந்தாரை ஆள வைக்கும் மாநிலம் என்ற சிறப்பு பெயர் பெற்று விளங்கும்

நன்றி 
செங்கதிரோன்


நடிகர் சங்க தேர்தல் குறித்த பதிவு 

No comments: