Saturday, June 25, 2016

இசை உலகின் தேவதைகள் : கிறிஸ்டினா பெர்ரி (Christina Perri )


ஒரே பாடலில் அதுவும் முதன் முதலாக வெளியான பாடலில் உலகப் புகழ் பெற்றவர்கள் சிலரே , அவர்களில் ஒருவர்தான் கிறிஸ்டினா. பென்சில்வேனியாவில் பிறந்த இவர், தன் சகோதரர்களைப் போல இசையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. கிதார் மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டார்.


21ம் வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் வந்து தனது இசைப்பயணத்தினை ஆரம்பித்தார். அனைவரையும் போல இவருக்கும் ஆரம்பகாலம் மிக கடுமையான ஒன்றாக அமைந்தது. இருப்பினும் 2010ம் ஆண்டு அமெரிக்காவின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான so you think you can dance என்ற நிகழ்ச்சியில் இவரின் jar of hearts என்ற பாடல் இடம் பெற்றது. பாடலைக் கேட்ட அரங்கமே அதிர்ந்தது.அடுத்த சில நாட்களில் இந்தப் பாடல் உலகம் முழுதும் சென்றடைந்தது. பல மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அப்பாடலைக் கேட்க நீங்களும் ஆர்வமாக இருப்பீர்கள் , உங்கள் குழாய் இணைப்பினைக்  கீழே கொடுத்துள்ளேன் கேட்டு பார்த்து மகிழுங்கள்.

அதற்கடுத்து இரண்டு இசைத்தொகுப்புகளை வெளியிட்டார். 2012ம் ஆண்டு அவரின் திறமையை நிரூபிக்க இன்னொரு வாய்ப்பு கிட்டியது. மிகப் பிரபலமான காதல் படமான Twilight saga; Breaking Dawn படத்தில் இவரின் A Thousand  years  பாடல் இடம் பெற்றது. இது முந்தைய jar of hearts ன் சாதனையை முறியடித்து தாறு மாறாக வெற்றி பெற்றது. எனக்கும் இந்தப் பாடலின் மூலம் தான் கிறிஸ்டினா பற்றித் தெரியும்.அந்தப் பாடலின் இணைப்பு கீழே உள்ளது.


புகழின் உச்சிக்கே சென்ற இவர் நான்காண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் முதல் அடுத்த இசைத்தொகுப்பினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.அவரின் பாடலைக் கேட்க உலகம் முழுதும் உள்ள அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேல உள்ள பாடல்களைக் கேட்ட பிறகு நீங்களும் கிறிஸ்டினாவின் ரசிகராக மாறிவிடுவீர்கள்.

நன்றி 
செங்கதிரோன் 

No comments: