Monday, February 13, 2017

காதலர் தின நீதிக்கதை:

காதலர் தினத்தன்று காதலியை அசத்துவதற்காக குரு தன் காதலி சாந்திக்கு கவிதை எழுதி கொடுக்க முடிவு செய்தான். பூங்கா, மொட்டை மாடி , தனி அறை என  இடங்களில்  உட்கார்ந்து நடந்து பல முயற்சி செய்தும்  ஒரு வரி கூட எழுத முடியவில்லை. அந்த சமயத்தில் தான் காதலர் தின சிறப்பு ஆனந்த விகடன் குரு கையில் கிடைத்தது. பக்கத்திற்கு பக்கம் காதல் கவிதைகள் இருந்த புத்தக்கத்தினை பார்த்ததும் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் அடைந்த அதே போன்தொரு மகிழ்ச்சியை அடைந்தான். உடனே அப்படியே அதில் உள்ள வரிகளை மாற்றாமல் வேறொரு பேப்பரில் எழுதி விட்டான். காதலர் தினத்தன்று பரிசுப்பொருட்களுடன் அந்த கவிதையும் கொடுத்தான. காதலி சாந்தி பல பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த கவிதையினை வாங்கி அங்கேயே படித்து ஆச்சர்யம் அடைந்தாள். 


காலங்கள் உருண்டோடின. அக்கா வீட்டிற்கு சென்றிருந்த குரு , அங்கே இருந்த பழைய குமுதம் ,ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் புத்தகங்களை எல்லாம் வீட்டில் இருக்கும் மனைவி படிப்பதற்காக கொண்டு வந்து கொடுத்தான். பின்னர் ஒருநாள் அலுவலகத்தில் மிக தீவிரமாக நண்பர்களுடன் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது மனைவி இன்று மாலை உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கின்றுது சீக்கிரம் வந்து விடுங்கள் என்று கூறினார்.

குரு மிக உற்சாகமாக வீட்டிற்கு சென்றான். மனைவி ஒரு கிப்ட் ஒன்றினை கொடுத்தாள். இன்றைக்கு என்ன ஸ்பெசல் என்று கேட்க இன்றைக்கு காதலர் தினம் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று சொன்னாள் .ஆர்வமாக பிரித்து பார்த்தான் குரு, அதில் பழைய ஆனந்தவிகடனும் , அவன் காதலர் தினத்தன்று முன்பு கொடுத்த கவிதை பேப்பரும் இருந்தது. அசடு வழிந்தான் குரு .

காதலியை ஏமாற்றலாம் மனைவியை ஏமாற்றவே முடியாது 

நன்றி 
செங்கதிரோன்