Tuesday, March 7, 2017

குற்றம்-23 : உண்மைக் கதையா ?



நம் தாத்தாக்கள் காலத்தில் பத்துக்கும் மிகாமல் குழைந்தை பெற்று சாதனை படைத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நெடு நாட்கள் வாழ்வதில் அதிக சிரமம் இருந்தது. ஆனால் தற்போதோ நிலையை  தலைகீழாக இருக்கின்றது.   ஒரே ஒரு குழந்தையினைப் பெற்றெடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது.


இந்த குழந்தையின்மை பிரச்சனையினை வைத்து பலரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் . அவற்றில் முக்கியமாக ஆங்கில மருத்துவர்களில் சிலர் மக்களின் அறியாமையினை  பயன்படுத்தி பணம் சம்பாரிக்கின்றனர். 

குற்றம் -23 படத்தில் இயக்குனர் அறிவழகன் மிக துணிச்சலாக இந்த மோசடியை படமாக்கியுள்ளார். படத்தில் வரும் டாக்டர் தம்பதி போன்றே நிஜத்தில் சென்னையில் ஒரு டாக்டர் தம்பதி மிகப் பெரிய மருத்துவமனையினை அதிக விளமபரங்கள் செய்து நடத்தி வருகின்றனர். அவர்களை மனதில் வைத்து தான் இந்தக் கதையினை அறிவழகன் உருவாக்கி இருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது . மிக முக்கியமாக அதே டாக்டர் தம்பதி போன்ற உருவ ஒற்றுமை கொண்டவர்களை நடிக்க வைத்திருப்பது இதனை மேலும் உறுதி செய்வதாக இருக்கின்றது (இணையத்தில் ஆ என்ற எழுத்தில் தொடங்கும் குழந்தை மருத்துவமனையினை தேடினால் நீங்களும் கண்டு பிடித்து விடுவீர்கள்).

படம் குறித்த எனது பார்வை கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.



நன்றி 
செங்கதிரோன்  

No comments: